“தலை சிறந்த மூன்றாண்டு தலை நிமிர்ந்த தமிழ்நாடு” - என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசின் மூன்றாண்டு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
விருதுநகர் தேசபந்து மைதானத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், “தலை சிறந்த மூன்றாண்டு தலை நிமிர்ந்த தமிழ்நாடு” என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசின் மூன்றாண்டு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S, அவர்கள் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர்கள் துவக்கி வைக்க உள்ளார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசின் மூலம் மூன்றாண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, மூன்றாண்டுகளில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள், பணிகள், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவைகள் குறித்து பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில், மூன்றாண்டு சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி 15.07.2024 அன்று தொடங்கப்பட்டு, 10 நாட்கள் நடைபெறவுள்ளது.
இந்த புகைப்பட கண்காட்சியில், தமிழ்நாடு முதலமைச்சரின் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட முத்தான திட்டங்களான, நான் முதல்வன் திட்டம், ஒரு இலட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப்பெண் திட்டம், மீண்டும் மஞ்சப்பை, நம்ம ஊரு சூப்பரு, 48 மணி நேரம் நம்மை காக்கும் இன்னுயிர் காப்போம் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி திட்டம், பசுமை தமிழகம், நம்ம School, TNGCC, ஆடுகளம், தமிழ்ப் பரப்புரைக் கழகம், எண்ணும் எழுத்தும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான இ.மதி திட்டம், Startup TN, கல்லூரி கனவு, நம் பள்ளி நம் பெருமை, வானவில் மன்றம், அயலக தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை, Tamilnadu Climate Change Mission, கலைத் திருவிழா- 2022-2023, மக்களுடன் முதல்வர், உலக முதலீட்டார் மாநாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் புகைப்படங்கள் இடம்பெற உள்ளன.
மேலும், விருதுநகர் மாவட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அவர்கள் கலந்து கொண்ட அரசு விழாக்கள், தொடங்கி வைத்த அரசு நலத்திட்டங்கள், திட்டப்பணிகள், விருதுநகர் மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு திட்டங்களான Coffee with Collector, விரு கேர், கரிசல் இலக்கியம், திருக்குறள் முற்றோதல், கற்றது ஒழுகு, பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள், அவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்புகள், போட்டித்தேர்வுகளுக்கு தயார் படுத்துவதற்காக சிறப்பு பயிற்சி வகுப்புகள், உயர்கல்வி குறித்த புரிதல் மற்றும் உயர்கல்வி படிப்புகளில் உள்ள துறைகள் குறித்து வழிகாட்டும் நோக்கில் கல்லூரிகளுக்கு கல்விச் சுற்றுலா, உயர்கல்வி படிப்பதற்கு விரிவான வழிகாட்டுதலையும், அவர்களின் எதிர்கால கல்வி நோக்கங்கள் குறித்து தகவல் அறிந்து முடிவுகளை எடுக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பசுமை ஆர்வலர்களை உருவாக்கும் திட்டம், மாணவர்களுக்கு கல்வியோடு, அவர்களின் கல்வி இணை செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அறிவோம் தெளிவோம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் மூன்றாண்டு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியில் இடம்பெற உள்ளது.எனவே, பொதுமக்கள் அனைவரும் மூன்றாண்டு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை கண்டுகளித்து அரசின் திட்டங்களை அறிந்து பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply