.கோவக்காய் பொரியல்.
தேவையான பொருட்கள்:
கோவக்காய் - 250g (நன்கு கழுவி, நீளவாக்கில் நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
கடுகு, உளுத்தம் பருப்பு - தலா -1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி
தனி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி (காரத்திற்கு ஏற்ப)
தனியா தூள் - 1/2 தேக்கரண்டி (விருப்பப்பட்டால்)
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து
தாளிக்கவும்.
நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
நறுக்கிய கோவக்காயை சேர்த்து, மிதமான தீயில் 5 நிமிடம் வதக்கவும்.
மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
தண்ணீரை தெளிக்காமல், மூடி போட்டு குறைவான தீயில் 10-15 நிமிடம் வேகவைக்கவும்.
அடிக்கடி கிளறி விடவும், இல்லையெனில் அடிப்பிடித்துவிடும்.
காய் நன்றாக வெந்து, மொறுமொறுப்பாக வந்ததும், தேங்காய் துருவல் தூவி கிளறி இறக்கவும்.
கோவக்காயை மிகவும் மெலிதாக நறுக்கினால் பொரியல் சீக்கிரம் வெந்து, வறுவல் போலமொறு மொறுப்பாக இருக்கும். தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு இது சிறந்த காம்பினேஷன்.
0
Leave a Reply