25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


உண்டு உறைவிடப் பயிற்சி பெற்று, அகில இந்திய நுழைவுத் தேர்வு(JEE) முதல்நிலை தேர்வில் தகுதி பெற்ற 11 அரசுப்பள்ளி மாணவர்களை இரண்டாம் நிலை தேர்வுக்கு பயிற்சி .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உண்டு உறைவிடப் பயிற்சி பெற்று, அகில இந்திய நுழைவுத் தேர்வு(JEE) முதல்நிலை தேர்வில் தகுதி பெற்ற 11 அரசுப்பள்ளி மாணவர்களை இரண்டாம் நிலை தேர்வுக்கு பயிற்சி .

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (19.02.2026) மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முன்னெடுப்பு மூலம் உண்டு உறைவிடப் பயிற்சி பெற்று, அகில இந்திய நுழைவுத் தேர்வு(JEE) முதல்நிலை தேர்வில் தகுதி பெற்ற 11 அரசுப்பள்ளி மாணவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி, இரண்டாம் நிலை தேர்வுக்கு பயிற்சி செய்து தயார்படுத்துவது தொடர்பாக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பயிற்சி ஆசிரியர்களுடன் கலந்துரையாடி அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் உள்ள பல்வேறு வாய்ப்புகளை அறிந்து கொள்ளும் வகையிலும், சிறந்த மதிப்பெண்கள் எடுத்துள்ள மாணவர்கள் மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, இந்திய அளவில் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் சேர்ந்து பயிலும் வகையிலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இந்தியாவில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT) இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (IIT) மற்றும் பிற பொறியியல் கல்லூரிகளில் இளங்கலை பொறியியல் படிப்புகளில் (B.E / B.Tech) சேர்க்கை பெறுவதற்காக நடத்தப்படும் அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கு(JEE) தயார்படுத்தும் வகையில் 79 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 15 நாட்கள் உண்டு உறை விட பயிற்சி அளிக்கப்பட்டது.அந்த வகையில் கடந்த மாதம் நடைபெற்ற அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கான(JEE) முதல்நிலை தேர்வில் 11 அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்று, இரண்டாம் நிலை தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

அந்த வகையில், இரண்டாம் நிலை தேர்வுக்கு தகுதி பெற்றுள்ள 11 மாணவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி, இரண்டாம் நிலை தேர்வுக்கு பயிற்சி செய்து தயார்படுத்துவது தொடர்பாக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பயிற்சி ஆசிரியர்களுடன் கலந்துரையாடி அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.மேலும், அடுத்த நிலை தேர்வுக்கான பயிற்சி புத்தகங்கள் மற்றும் கையேடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாணவர்களுக்கு வழங்கினார்.

அரசுப்பள்ளியில் பயிலும் எங்களுக்கும், இந்திய அளவிலான தலைசிறந்த கல்லூரிகளில் பயில்வதற்கான வாய்ப்புகள் குறித்தும், அதற்கான நுழைவுத்தேர்வு பயிற்சிகளையும்  வழங்கும் தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கு அரசுப்பள்ளி மாணவர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட நிலை உயர் அலுவலர்கள், கல்வித்துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News