கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 30% சிறப்பு தள்ளுபடி விற்பனை
விருதுநகர் தெப்பம் பஜாரில் அமைந்துள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் (26.09.2025) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 30 சதவீத சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I AS., அவர்கள் குத்துவிளக்கேற்றி, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். கோ-ஆப்டெக்ஸ் என அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், 1935-ம் ஆண்டு துவக்கப்பட்டு தொடர்ந்து 90 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான முறையில் சேவை புரிந்து வருகிறது.
கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் காஞ்சிபுரம், ஆரணி, சேலம், திருப்புவனம் பட்டு சேலைகள், கோவை மென்பட்டு சேலைகள், பட்டு வேட்டிகள், கைத்தறி சுங்குடி சேலைகள், காஞ்சிபுரம், செட்டிநாடு, சேலம், பரமக்குடி, திண்டுக்கல், அருப்புக்கோட்டை பருத்தி சேலைகள் மற்றும் கோவை கோரா பருத்தி சேலைகள் புதிய வடிவில் ஏராளமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் நவீன யுக ஆடவர்களை கவரும் விதமாக பருத்தி சட்டைகள், லினன்,பருத்தி சட்டைகள், லுங்கிகள், வேட்டிகள், துண்டுகள், மகளிருக்கான சுடிதார்இரகங்கள்,நைட்டிகள்மற்றும்குர்தீஸ்கள்கண்ணைக்கவரும்வண்ணங்களில்வாடிக்கையாளர்களுக்குவிற்பனைக்காகவைக்கப்பட்டுள்ளன. கைத்தறி ரகங்களின்விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டு மற்றும் பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கி உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 3 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களான விருதுநகர் விற்பனை நிலையத்திற்கு ரூ.60 இலட்சமும், சிவகாசி விற்பனை நிலையத்திற்கு ரூ.55 இலட்சமும் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் விற்பனை நிலையத்திற்கு ரூ.40 இலட்சமும் ஆக மொத்தம் ரூ.155 இலட்சம் தீபாவளி விற்பனை குறியீடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தின் கடந்த ஆண்டு தீபாவளி விற்பனை ரூ.43 இலட்சம் ஆகும்.கோ ஆப்டெக்ஸ் ஜவுளி இரகங்களை மின் வணிக வலைதளமான www.cooptex.gov.in என்ற இணையதளத்தின் மூலமும் வாடிக்கையாளர்கள் வாங்கி பயன் பெறலாம். கோ ஆப்டெக்ஸின் மாதாந்திர சேமிப்பு திட்டத்திலும் வாடிக்கையாளர்கள் சேர்ந்து பயன்பெறுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.இந்நிகழ்ச்சியில், மண்டல மேலாளர் திரு.பி.ஸ்டாலின், விற்பனை நிலைய மேலாளர் திருமதி ஆர்.கீதா, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply