IRCTC எச்சரிக்கை!
'irctcconnect.apk'என்கிற ஆண்ட்ராய்டு செயலியை பதிவிறக்கக்கோரி வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் செயலியை பதிவிறக்க வேண்டாம் என்று ஐஆர்சிடிசி எச்சரித்துள்ளது
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) மக்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. 'irctcconnect.apk' என்கிற ஆண்ட்ராய்டு செயலியை பதிவிறக்க வேண்டாம் என்று ஐஆர்சிடிசி எச்சரித்துள்ளது. வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற பிரபலமான தளங்களில் இதுபோன்ற செயலிகளை பதிவிறக்க கோரி செய்திகள் அனுப்பப்படுகிறது. இந்த apk உங்கள் மொபைலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று ஐஆர்சிடிசி எச்சரித்துள்ளது. செயலியின் பின்னணியில் உள்ள மோசடி நபர்கள் ஐஆர்சிடிசி அதிகாரிகள் போல நடித்து ஒரு நபரின் தனிப்பட்ட தகவல்களைப் பெற முயற்சிக்கின்றனர். எனவே இந்த செயலியை டவுன்லோடு செய்வதை தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
0
Leave a Reply