25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >>


ஆடு, மாடுகளை மேய்க்க உதவிய 'பெல்ஜியன் செப்பர்டு' என்ற நாய் இனம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆடு, மாடுகளை மேய்க்க உதவிய 'பெல்ஜியன் செப்பர்டு' என்ற நாய் இனம்.

'பெல்ஜியன் மாலினாய்ஸ்' என்ற இன நாய்களில், நான்கு இனங்கள் உள்ளன. புத்திசாலித்தனம், பயிற்சித்திறன் மற்றும் அச்சமற்ற தன்மை காரணமாக இந்த நாய்கள் காவல் படைகள், தேடல் மற்றும் மீட்புக்குழுக்களிலும் பயன்படுகின்றன.  நாய் வளர்ப்போரிடம்  இந்த நாய்கள் செல்லப்பிராணி என்றாலும், பெல்ஜியன் மாலினாய்ஸ் நாய்களை செல்லப்பிராணியாக வளர்க்க இயலாது 

 இந்த நாய்கள் இருக்கும் இடத்தில் வெளி ஆட்கள் யாரும் எளிதாக நுழைய முடியாது."அனாயசமாக மரங்களில் ஏறும், வீடுகளின் தாழ்வாரத்தில் விறுவிறுப்பாக ஓடும். திருடர்கள் இதனிடம் மாட்டினால் அவ்வளவுதான். இந்த நாய் இனம், சாம்பல் நிற ஓநாய் இனத்தில் இருந்து உருவானதாக கருதப்படுகிறது. வரலாற்றுக்கு முந்தைய மனிதன்15 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சாம்பல் நிற ஓநாய்களை தனது வேட்டை நாய்களாக வளர்த்து இருக்கக் கூடும். இந்த ஓநாய்கள் தொடர்ந்து மனிதர்களை சுற்றி வளர்ந்ததால், ஒரு கட்டத்தில் இயற்கையான வளர்ப்பு நாயாக மாற்றம் அடைந்து இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வேட்டையாடி வாழ்ந்த பழங்கால மனிதர்கள், கால்நடை வளர்ப்பு மற்றும் மேய்ச்சல் நடைமுறைக்கு மாறிய போது இந்த நாய்கள் கால்நடைகளை மேய்க்க உதவி உள்ளன.

பொதுவாக, பெல்ஜியன் மாலினாய்ஸ் நாய்கள், செம்மறி ஆடு வளர்ப்பு தொழிலை கொண்ட பெல்ஜியத்தின் சியென் டி பெர்கர் பெல்ஜ் என்ற இடத்தில் தோன்றி இருக்கலாம் என்றும், இவை ஆடு, மாடுகளை மேய்க்க உதவியதால்'பெல்ஜியன் செப்பர்டு' என்ற பெயரை பெற்றன என்றும் கூறுகின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News