25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


இளைஞர் நீதிக்குழுமத்தில் முன்னிலைப்படுத்தப்படும் சட்டத்துடன் முரண்பட்ட குழந்தைகள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இளைஞர் நீதிக்குழுமத்தில் முன்னிலைப்படுத்தப்படும் சட்டத்துடன் முரண்பட்ட குழந்தைகள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி

ிருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(20.02.2026) இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015, பிரிவு 4-ன்படி, இளைஞர் நீதிக்குழுமத்தில் முன்னிலைப்படுத்தப்படும் சட்டத்துடன் முரண்பட்ட குழந்தைகள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சட்டத்திற்கு முரணான செயல்களில் ஈடுபடும்போது அவர்கள் சட்டத்துடன் முரண்பட்ட குழந்தைகள் என கருதப்படுகின்றனர். இதுபோன்ற நிலையில் உள்ள குழந்தைகளின் கல்வி, வேலைவாய்ப்பு, குடும்ப மற்றும் பொருளாதார நிலை, எதிர்காலம் மிகவும் பாதிக்கப்படுகிறது. மீண்டும் மீண்டும் தவறுகளை செய்து குற்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. இளஞ்சிறார்கள் தங்களின் தவறுகளை திருத்திக் கொண்டு நல்வழியில் ஈடுபடவேண்டும்.

பெற்றோர்கள் மிகவும் கஷ்டப்பட்டு குழந்தைகளை வளர்ப்பதற்கும், படிக்க வைப்பதற்கும் மிகவும் சிரமப்படுகிறார்கள். பெற்றோர்களின் கஷ்டங்களையும், தங்களின் எதிர்கால வாழ்வினையும் உணர்ந்து குழந்தைகள் அனைவரும் செயல்பட வேண்டும். அனைத்து குழந்தைகளும் நல்லமுறையில் உயர்கல்வி வரை பயில புதுமைப்பெண், தமிழ் புதல்வன், நான் முதல்வன், அன்புக்கரங்கள் நிதி உதவி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டங்களை தங்கள் வாழ்க்கைக்கான ஏணிப்படிகளாக பயன்படுத்தி வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்லவேண்டும். இளஞ்சிறார்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கு தேவையான உதவிகளை செய்ய மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. தொழில் திறன் உள்ள இளஞ்சிறார்கள் சுயதொழில் செய்ய முன்வரும் பட்சத்தில் அவர்களுக்கு தொழிற்பயிற்சி அளித்து கடனுதவி பெற்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் விருதுநகர் சார்பு நீதிபதி திரு.P.பாலமுருகன், விருதுநகர் இளைஞர் நீதிக்குழுமம் முதன்மை நடுவர் திருமதி P.S.A.நிஷாந்தினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மரு.க.பிரதௌஸ் பாத்திமா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி இல.மீனாட்சி, நன்னடத்தை அலுவலர் திரு,பால் இக்னேசியஸ் சேவியர்ராஜ், இளைஞர் நீதிக்குழும உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News