25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பல்வேறு அரசுத்துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கள ஆய்வு மற்றும்  ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பல்வேறு அரசுத்துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கள ஆய்வு மற்றும் ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவர் / வேடசந்தூர் தொகுதியின்  சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.காந்திராஜன் அவர்கள் தலைமையில் மதிப்பீட்டுக் குழு(2024-2026) நாளை(22.10.2024) விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை புரிந்து, வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை, கால்நடை பராமரிப்பு (கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை), பிற்படுத்தப்பட்டோர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கூட்டுறவு (கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை), நெடுஞ்சாலைகள் (நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை), சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் (உள்.மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை), நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, அறநிலையங்கள் துறை (சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை), வனம் (சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை), இயற்கை வளங்கள் துறை ஆகிய துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கள ஆய்வு செய்ய உள்ளது.

  பின்னர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழுவானது நாளை 04.02.2026 அன்று பிற்பகல் 03.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள ஆய்வுக் கூட்டத்தில் மானிய கோரிக்கைகள் மற்றும் மேற்படி நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து தொடர்புடைய துறை அலுவலர்களுடன் விவாதிக்கப்பட உள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News