25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


சிவகாசி ஊராட்சி ஒன்றியம், குமிழங்குளம் ஊராட்சியில் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் , அவர்கள் தலைமையில் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிவகாசி ஊராட்சி ஒன்றியம், குமிழங்குளம் ஊராட்சியில் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் , அவர்கள் தலைமையில் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஊராட்சி ஒன்றியம், குமிழங்குளம் ஊராட்சியில்  (26.01.2026) 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, கிராமசபைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்  கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும் (01.04.2025 முதல்31.10.2025 வரை), கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்தும், மக்கள் திட்டமிடல் இயக்கம் (People’s Plan Campaign) மூலம் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சித் திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல் குறித்தும், தொழிலாளர் வரவு - செலவு திட்டம்  குறித்தும் வரவு - செலவு திட்டப் பணிகள், நலிவு நிலை குறைப்பு நிதி, தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம், ஜல் ஜீவன் திட்டம், சிறு பாசன ஏரிகள் புதுப்பித்தல் குறித்த விபரம், தொகுதி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் இதர பொருட்கள் குறித்து  விவாதிக்கப்பட்டது.

 அரசு என்பது எல்லா மக்களையும் சமமாக பார்த்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரும் ஒரு அமைப்பாகும்.இந்த கிராம சபையின் மிக முக்கிய நோக்கம் என்னவென்றால்,  இந்த கிராமசபை கூட்டத்தின் வாயிலாக இந்த கிராமத்தின் வளர்ச்சிக்கு தேவையான பணிகள் அரசு மூலம் என்னென்ன வளர்ச்சி பணிகள் முடிக்கப்பட்டுள்ளது, என்னென்ன பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் என்னென்ன தேவைகள் உள்ளது என்பது கிராம மக்கள் வாயிலாக அறிந்து அதை செயல்படுத்துவது தான் இதன் நோக்கம்.மாவட்டத்தில் தமிழக அரசின் வழிகாட்டுதலின் படி, எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், மக்களின் தேவைகளை அறிந்து இனி வரும் காலங்களில் படிப்படியாக பூர்த்தி செய்து தரப்படும்.தற்பொழுது, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று , வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. வரைவு வாக்காளர் பட்டியலுக்கு முன்னதாக 16,26,458 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.

 தற்போது வரைவு வாக்காளர் பட்டியலில் 14,36,521 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் வரைவு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்தி கொள்ளவும்ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசின் மூலம்  மகளிருக்கான கடனுதவிகள், உதவித்தொகைகள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன.உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மக்களின் தேவைகள் அறிந்து அதனை பூர்த்தி செய்தும், நலம் காக்கும் ஸ்டாலின் என்ற மருத்துவ சிறப்பு முகாம் மூலம் சிறப்பு சேவைகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக,  மாவட்ட நிர்வாகம் சார்பாக பள்ளிக்கல்வியினை தொடர இயலாத மாணவர்களின் இல்லங்களுக்கு மாவட்ட நிலை அலுவலர்கள் நேரடியாகச் சென்று,  கல்வியினைத் தொடர இயலாத நிலையினை கண்டறிந்து அம்மாணவர்களை மீண்டும் பள்ளிக்கல்வியினைத் தொடர்வதற்காக  முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.மேலும், இரத்த சோகை குறைபாடுள்ள 430-கர்ப்பிணி தாய்மார்கள், ஊட்டச்சத்து குறைபாடுள்ள 1800-குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து பொருட்களை அலுவலர்கள் நேரடியாக அவர்களின் இல்லங்களுக்கேச் சென்று அளித்து வருகின்றனர்.இதுபோன்று பொதுமக்களின் குறைகள் படிப்படியாக நிவர்த்தி செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, 2-கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினையும், 2 பயனாளிகளுக்கு  தலா ரூ.30 ஆயிரம் மதிப்பில்  ஆடு மற்றும் கறவை மாடு வளர்ப்பிற்காக மொத்தம் ரூ.60 மதிப்பிலான கடனுதவிகளையும், ஒரு நபருக்கு சிறு வணிகக் கடை அமைப்பதற்கு ரூ.20 ஆயிரம் கடனுதவியும் என 5 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.80 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.மேலும், தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.இந்த கிராம சபைக் கூட்டத்தில் சிவகாசி வட்டாட்சியர் திரு.இலட்சம், வட்டார வளர்ச்சி அரசு அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News