விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளால் வழங்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் (20.09.2024) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தெரிவித்துக் கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அவர்கள் விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து உரிய விளக்கம் அளித்து தொடர் நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.கடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளால் வழங்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை துணை இயக்குநர்/ மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ) அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் பயிர் விளைச்சல் போட்டியில் நெல் பயிரில் மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற நல்லூர்பட்டி, வத்திராயிருப்பு விவசாயிக்கு ரூ.15000/- வழங்கப்பட்டது. பயிர் விளைச்சல் போட்டியில் நெல் பயிரில் மாவட்டஅளவில் இரண்டாம் பரிசு பெற்ற முள்ளிகுளம், திருவில்லிபுத்தூர் விவசாயிக்கு ரூ.10000/- வழங்கப்பட்டது.
பயிர் விளைச்சல் போட்டியில் மக்காச்சோளம் பயிரில் மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற சுப்ரமணியபுரம், வெம்பக்கோட்டை விவசாயிக்கு ரூ.10000/- வழங்கப்படுகிறது. பயிர் விளைச்சல் போட்டியில் மக்காச்சோளம் பயிரில் மாவட்ட அளவில் இரண்டாம் பரிசு பெற்ற கங்கர்செவல், வெம்பக்கோட்டை விவசாயிக்குரூ.5000/- வழங்கப்பட்டது. தோட்டக்கலைத்துறையின் மூலம் வெங்கடேஷ்வாபுரம் என்ற விவசாயிக்கு SHDS மாடித்தோட்ட தொகுப்பு ஒரு எண்ணம் ரூ.450/- மானியத்தில் வழங்கப்பட்டது. என்.மேட்டுப்பட்டியை சேர்ந்த விவசாயிக்கு வேளாண்மை வளர்ச்சித்திட்டதின் கீழ் நறுமணப்பொருட்கள் மற்றும் மிளகாய் விதைகள் ரூ.6000/- மானியத்தில் வழங்கப்பட்டது. பனையடிப்பட்டியை சேர்ந்த விவசாயிக்கு வேளாண்மை வளர்ச்சித்திட்டதின் கீழ் நறுமணப்பொருட்கள் மற்றும் மிளகாய் ரூ.4,800/- மானியத்தில் வழங்கப்பட்டது. எம்.துரைச்சாமிபுரத்தைச் சேர்ந்த விவசாயிக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வெண்டை விதை ரூ.1,500/- மானியத்தில் ஆகிய இடுபொருட்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது.
கண்மாய்கள் மற்றும்; ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று முன்னுரிமை அடிப்படையில் அப்பகுதிக்குரிய வட்டாட்சியர், செயற்பொறியாளர், நீர்வளத்துறை, வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் செயற்பொறியாளர், வேளாண் பொறியியல் துறை, விருதுநகர் இணைந்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்கள்.
சீமைக் கருவேல மரங்களை அரசு ஆணையின்படி அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சீமைக் கருவேல மரங்களை அகற்றினால் மட்டுமே வனவிலங்குள் காட்டுப்பன்றிகள் பயிர் சேதத்தினை தடுக்க முடியும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள்.
விருதுநகர், திருவில்லிபுத்தூர் மற்றம் இராஜபாளையம் கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி எடுத்த நடவடிக்கையின் விபரத்தை உடன் தொடர்புடைய அலுவலகத்திற்கு சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். வனவிலங்குகளால் பயிர்சேதம் ஏற்படும் பட்சத்தில் வனத்துறையினர் முன்னுரிமை அடிப்படையில் கள ஆய்வு செய்து விவசாயிகளுக்கு இழப்பீடு உடனடியாக வழங்கிட வேண்டும். கம்பிக்குடி கால்வாய் திட்டத்தினை செயல்படுத்திட துரித நடவடிக்கையினை எடுக்குமாறு செயற்பொறியாளர், குண்டாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உரம் போதியளவு இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டது. மாவட்டத்தில் மல்லிகை செண்ட் தொழிற்சாலை அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
0
Leave a Reply