நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியாகும் படம் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'.
நடிகர் தனுஷ் இயக்கத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் நாயகனாக அறிமுகமாக, அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், மேத்யூ தாமஸ் நடித்துள்ள 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படம் பிப்., 21ல் வெளியாகிறது . ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதன் டிரைலர் வெளியானது. காதல், காதல் தோல்வி, நண்பர்களுடனான லூட்டி என டிரைலர் கலர்புல்லாக இருக்கிறது. டிலைரின் துவக்கத்தில் வரும் தனுஷ், 'இது வழக்கமான கதை தான்' என்று கூறுபவர் முடிவில் 'ஜாலியா வாங்க, ஜாலியா போங்க' என பேசி உள்ளார். 6 மணிநேரத்திலே 11லட்சம் பார்வைகளை இந்த டிரைலர் கடந்தது.
0
Leave a Reply