25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை (IELTS) தேர்விற்கான பயிற்சி சேர இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை (IELTS) தேர்விற்கான பயிற்சி சேர இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்குபல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்கள்  ஆஸ்திரேலியா,அமெரிக்கா, கனடா,  இங்கிலாந்து,   அயர்லாந்து,  பிரான்ஸ், மற்றும்  நியூசிலாந்து   போன்ற முன்னணி வெளிநாட்டு பல்கலை கழகங்களில்  இளங்கலை அல்லது  முதுகலை பட்ட படிப்பு பயில அடிப்படையான International English Language Testing System (IELTS) சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை  தேர்விற்கான  பயிற்சி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இப்பயிற்சியினை பெற 18 முதல் 35 வயது நிரம்பிய  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்த மாணாக்கர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பில் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
இப்பயிற்சிக்கான கால அளவு ஒன்றரை மாதமும் விடுதியில்தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவீன தொகையை  தாட்கோவால் ஏற்கப்படும். இப்பயிற்சியில் சேர்வதற்கு தாட்கோ இணையதளம்(www.tahdco.com)  என்ற முகவரியில் பதிவு செய்ய  வேண்டும்.
 தகுதியுடைய விண்ணப்பதாரர்கள்  பதிவு செய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.,அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News