25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, அத்தியாவசிய சேவைகளில் (AVES) பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு தபால் வாக்கு மூலம் வாக்கு செலுத்த, தபால் வாக்கு மையம் (Postal Voting Centre) அமைக்கப்பட்டுள்ளது .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, அத்தியாவசிய சேவைகளில் (AVES) பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு தபால் வாக்கு மூலம் வாக்கு செலுத்த, தபால் வாக்கு மையம் (Postal Voting Centre) அமைக்கப்பட்டுள்ளது .

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தேர்தல் நாளில் (23.04.2026) அனைத்து தரப்பினரும் தங்களது வாக்குகளை செலுத்த வழிவகை செய்யும் வகையில், அத்தியாவசிய சேவைகளில் (AVES) பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு தபால் வாக்கு மூலம் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, விருதுநகர் மாவட்டத்தின் 7- சட்டமன்ற தொகுதிகளில் வருகின்ற 17.04.2026, 18.04.2026 மற்றும் 19.04.2026 ஆகிய நாட்களில், காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை அத்தியாவசிய சேவைகளில் (AVES) பணிபுரியும் பணியாளர்களுக்கும், 20.04.2026, 21.04.2026 மற்றும் 22.04.2026 ஆகிய நாட்களில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கும் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அலுவலகங்களில் கீழ்க்கண்ட விவரப்படி தபால் வாக்குகளை செலுத்த தபால் வாக்கு மையம் (Postal Voting Centre) அமைக்கப்பட்டுள்ளது.

202-இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் தபால் வாக்கினை வட்டாட்சியர் அலுவலகம், இராஜபாளையத்திலும்,  203-திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தபால் வாக்கினை வட்டாட்சியர் அலுவலகம், திருவில்லிபுத்தூரிலும்,  204-சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தபால் வாக்கினை வட்டாட்சியர் அலுவலகம், சாத்தூரிலும், 205-சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் தபால் வாக்கினை உதவி ஆட்சியர் அலுவலகம், சிவகாசியிலும், 206-விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் தபால் வாக்கினை வட்டாட்சியர் அலுவலகம், விருதுநகரிலும், 207-அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் தபால் வாக்கினை வட்டாட்சியர் அலுவலகம், அருப்புக்கோட்டையிலும், 208-திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில் தபால் வாக்கினை வட்டாட்சியர் அலுவலகம், திருச்சுழியிலும் செலுத்தலாம்.

இதுதொடர்பாக, 202-இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு திரு.இராஜீவ் காந்தி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்/ வருவாய் வட்டாட்சியர் (94450 00661) அவர்களையும், 203-திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு திரு.பாலமுருகன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்/ வருவாய் வட்டாட்சியர் (94450 00660) அவர்களையும்,  204-சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு திரு.வடிவேல், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்/ வருவாய் வட்டாட்சியர் (94450 00662) அவர்களையும், 205-சிவகாசி சட்டமன்றத் தொகுதிக்கு திரு.லட்சம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்/ வருவாய் வட்டாட்சியர் (94450 00663.) அவர்களையும், 

206-விருதுநகர் சட்டமன்றத் தொகுதிக்கு திரு.இராஜாமணி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்/ வருவாய் வட்டாட்சியர் (94450 00667) அவர்களையும், 207-அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு திரு.செந்திவேல், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்/ வருவாய் வட்டாட்சியர் (94450 00664) அவர்களையும்,  208-திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு திரு.கருப்பசாமி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்/ வருவாய் வட்டாட்சியர் (94450 00668) அவர்களையும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர்/மாவட்டத் தேர்தல் அலுவலர்  மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News