ரூ.900 கோடி நிறுவனத்தை உருவாக்கிய 23 வயது பெண், அஞ்சலி சர்தானா.
புத்தொழில் (ஸ்டார்ட்அப்) நிறுவனம் ஒன்று. தொடங்கப்பட்ட ஒரே ஆண்டுக்குள் ரூ.900 கோடி மதிப்பை எட்டியுள்ளது.இதைத் தொடங்கியவர், அஞ்சலி சர்தானா என்ற 23 வயது இளம்பெண்.இவரது ப்ரோண்டோ நிறுவனம், கர்நாடக மாநிலம் பெங்களூருவை தளமாகக்கொண்டது.பயிற்சிபெற்றவீட்டுப்பணியாளர்களையும், பயனர்ளர்களையும்இணைக்கும்இந்நிறுவனம், புதிதாக 230 கோடி நிதி திரட்டியுள்ளது., தொடங்கப்பட்ட ஒரு ஆண்டுக்குள் ரூ.922 கோடி மதிப்பை எட்டி யுள்ளது.
இந்த நிறுவன செயலியின் மூலம், வீட்டைத் துடைத்தல், பாத்திரங்களைக் கழுவுதல், சமையலறை மற்றும் குளியலறை சுத்தம் செய்தல், துணி துவைத்தல் மற்றும் பிற வீட்டு வேலைகளுக்கு பணியாளர்களை முன்பதிவு செய்யலாம்.தற்போது இந்த செயலி, டெல்லி தலைநகரப் பகுதி, சென்னை, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத்,உள்ளிட்ட பெருநகரங்களில் பயன்பாட்டில் உள்ளது.
அஞ்சலி சர்தானா, கடந்த 2024-ம் ஆண்டில்அமெரிக்காவின் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் இளநிலை உயிரியல் பட்டம் பெற்றார்."ஒன்பது மாதங்களுக்கு முன்னர், டெல்லி அருகே குருகிராமில் உள்ள எங்கள் மையத்தில் செயல்பட்டோம். எங்களிடம் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான சேவை கிடைப்பதை உறுதி செய்ய உழைத்துக் கொண்டிருந்தோம். சில நாட்கள் நாங்கள் தரையிலும் படுத்து உறங்கி யிருக்கிறோம்.
அப்போது நாளொன்றுக்கு சுமார் 170 முன்பதிவுகள் வரும். இப்போது ஒரு நாளைக்கு 18 ஆயிரத்துக்கும் அதிகமான முன்பதிவுகளை பெறுகிறோம்.எங்களிடம், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அர்ப்பணிப் புள்ள, மகிழ்ச்சியான பணியாளர்கள் உள்ளனர். கடந்த 3 மாதத்தில் மட்டும் நாங்கள் 300 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளோம்" என்று அசாதாரணசாதனை படைத்த பெருமையுடன் கூறுகிறார்,அஞ்சலி சர்தானா.
0
Leave a Reply