அனுமந்தபுரம் வீரபத்திரர்.
தட்சனின் யாகத்தை நிறுத்த வீரபத்திரரை அனுப்பினார் சிவபெருமான். தட்சனின் தலையை வீரபத்திரர் வெட்ட, அவனது தலை யாகத்தீயில் விழுந்தது.
இதைக் கண்ட தட்சனின் தந்தையாகிய பிரம்மாவின் ஆணையால் ஆட்டின் தலை தட்சனுக்குப் பொருத்தப்பட்டது. அங்கிருந்து சினத்துடன் புறப்பட்ட வீரபத்திரர் பூலோகத்தில் அனுமந்தபுரம் வெற்றிலை தோட்டத்தில் தங்கி சாந்தம் அடைந்தார். அந்த இடத்தில் கோயில் கட்டப்பட்டது. அமாவாசையன்று தீர்த்தத்தில் நீராடி சுவாமி வெற்றிலை மாலை சாத்துகின்றனர்.
விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து 10 கி.மீ.,
0
Leave a Reply