25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >>


அடுத்த ஆண்டு முதல் வாகனங்களில் V2V வசதி கட்டாயம்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அடுத்த ஆண்டு முதல் வாகனங்களில் V2V வசதி கட்டாயம்!

சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கில், வாகனங்கள் ஒன்றுக்கொன்று தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் V2V (Vehicle-to-Vehicle) தொழில்நுட்பத்தை அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பத்தின் மூலம், சாலையில் பயணிக்கும் ஒரு வாகனம் தன்னைச் சுற்றியுள்ள மற்ற வாகனங்களுடன் தானாகவே தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும். இதனால் அருகில் செல்லும் வாகனத்தின் வேகம், அதன் தொலைவு உள்ளிட்ட தகவல்களை ஓட்டுநர்கள் முன்கூட்டியே அறிந்து எச்சரிக்கையாகச் செயல்பட முடியும்.

சிம் கார்டு தேவையின்றி வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் இயங்கும் V2V சாதனங்கள், 5.875 முதல் 5.905 GHz வரையிலான அலைவரிசையில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

V2V தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதற்கான வரைவு விதிகள் தொடர்பாக பொதுமக்களிடமும் மத்திய அரசு கருத்துகளை கேட்டுள்ளது

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News