அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள ஒப்பந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
தேசிய ஆயுஷ் இயக்கம் மற்றும் இந்திய மருத்துவம் & ஓமியோபதித்துறை (NAM) மற்றும் தேசிய சுகாதார திட்டத்தின்(NHM) கீழ் செயல்படும் விருதுநகர் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்களுக்கு கல்வித்தகுதி மற்றும் ஊதியத்தின் அடிப்படையில் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த பணியாளராக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 14.11.2025 அன்று மாலை 05.00 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.
1. பதவியின் பெயர் : ஆயுஷ் மருத்துவ ஆலோசகர் (Consultant – Yoga and Naturopathy)
கல்வித்தகுதி : BNYS (Bachelor of Naturopathy and Yogic Sciences) Registration with respective Board/counci
வயது வரம்பு : 59 – ஆண்டுகள் மற்றும் அதற்கும் குறைவாக
மொத்த காலிப் பணியிடங்கள் : 03 (அரசு மருத்துவமனைகள் - திருவில்லிபுத்தூர் – 01, சாத்தூர் - 01, இராஜபாளையம் – 01)
மாத தொகுப்பூதியம் : ரூ.40,000/-
2. பதவியின் பெயர் : ஹோமியோபதி மருத்துவர்
கல்வித்தகுதி :BHMS (Bachelor of Degree BHMS From recognized university)
வயது வரம்பு : 59 – ஆண்டுகள் மற்றும் அதற்கும் குறைவாக
மொத்த காலிப் பணியிடங்கள் : 01 (டி.மானகசேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்)
மாத தொகுப்பூதியம் : ரூ.34,000/-
3. பதவியின் பெயர் : பல்நோக்கு பணியாளர்கள் (Attender / Multipurpose Worker)
கல்வித்தகுதி :எட்டாம் வகுப்பு தேர்ச்சி தமிழில் எழுதப் படிக்க தெரிய வேண்டும்.
வயது வரம்பு : 59 – ஆண்டுகள் மற்றும் அதற்கும் குறைவாக
மொத்த காலிப் பணியிடங்கள் :04 (அரசு மருத்துவமனைகள் - ஸ்ரீவில்லிபுத்தூர்-1, சாத்தூர் -1, இராஜபாளையம்-1, சிவகாசி-1)
மாத தொகுப்பூதியம் : ரூ.10,000/-
4. பதவியின் பெயர் : சிகிச்சை உதவியாளர்கள் (Therapeutic Assistant)
கல்வித்தகுதி :Diploma in Nursing Therapist course (for certificate issued by Government of Tamilnadu only)
வயது வரம்பு : 59 – ஆண்டுகள் மற்றும் அதற்கும் குறைவாக
மொத்த காலிப் பணியிடங்கள் : 04 [அரசு மருத்துவமனைகள் - இராஜபாளையம்-2 (ஆண் - 1, பெண்-1) , சிவகாசி-2 (ஆண்-1 , பெண்-1)]
மாத தொகுப்பூதியம் : ரூ.15,000/-
மேலும், இந்த பதவி முற்றிலும் தற்காலிகமான ஒன்றாகும். எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது. பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Under Taking) அளிக்கவேண்டும். மேற்குறிப்பிட்டபதவிகளின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது.
விண்ணப்ப படிவங்களை http://virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ அல்லது அருகிலுள்ள மாவட்ட சுகாதார நல அலுவலகத்திலோ பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், விண்ணப்பத்துடன் விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, முழுமையான முகவரி மற்றும் அலைபேசி எண் குறிக்கப்பட்டிருக்க வேண்டும். சுயசான்றொப்பமிட்ட கல்வித்தகுதிக்கான சான்றிதழ் (ம) மதிப்பெண் சான்றிதழின் நகல், சுயசான்றொப்பமிட்ட சாதிச்சான்றிதழ் நகல், சுயசான்றொப்பமிட்ட இருப்பிடச் சான்றிதழ் நகல் (குடும்பஅட்டை/ஆதார் அட்டை ) உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை இணைத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, நிர்வாக செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம் , மாவட்ட சுகாதார நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர் மாவட்டம்-626 001 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ அனுப்பலாம்.
மேலும், மேற்குறிப்பிடப்பட்டுள்ள தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் மற்றும் முழுமையான விவரங்கள் மற்றும் சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S,.அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply