மாவட்டத்தில் உள்ள சுற்றுலா சார்ந்த தொழில்முனைவோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
தமிழ்நாடு சுற்றுலா மேம்பாடு தொடர்பாக, சட்டப்பேரவையில் சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்களால் 2021-2022 ஆம் ஆண்டிற்கான பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு அதில் மாநில அளவிலான சுற்றுலாத்துறை சம்பந்தப்பட்ட தொழில் புரிவோருக்கு விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் உலக சுற்றுலாத்தினத்தன்று வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சுற்றுலா பயண முகவர்கள், விமான நிறுவனங்கள் , தங்கும் விடுதிகள், உணவகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சுற்றுலா சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு 2024ம் ஆண்டிற்கான மொத்தம் 48 விருதுகள் 17 வகைப்பாடுகளில் வழங்கப்படவுள்ளது.
விருது வழங்கப்படும் வகைப்பாடுகள்
1. சிறந்த உள்நாட்டு பயண முகவர் (Best Inbound Tour operator)
2. சிறந்த உள்நாட்டு பயண முகவர் (Best Domestic Tour operator)
3. சிறந்த பயண பங்குதாரர்
4. சிறந்த விமான நிறுவன பங்குதாரர்
5. சிறந்த தங்கும் விடுதி
6. சிறந்த உணவகம்
7. சிறந்த (Niche) சுற்றுலாத்தலம்
8. சிறந்த சாகச சுற்றுலா மற்றும் கேம்பிங் சைட் அமைப்பாளர்கள்
9. சிறந்த (MICE) சுற்றுலா அமைப்பாளர்கள்
10. சிறந்த சமூக ஊடகவியலாளர் (Special Media Influencer)
11. சிறந்த சுற்றுலா வழிகாட்டி
12. சிறந்த சுற்றுலா விளம்பரங்கள்
13. சிறந்த சுற்றுலா மேம்பாட்டு வெளியீட்டுகள்
14. சிறந்த சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் சார்ந்த கல்வி நிறுவனங்கள்
மேற்கண்டபடி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா சார்ந்த தொழில்முனைவோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இணையவழி மூலமாக விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.08.2024 மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட இனங்களுக்கு சென்னையில் நடைபெறும் உலக சுற்றுலா தினவிழா (27-09-2024) அன்று விருதுகள் வழங்கப்படும் எனவும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு சுற்றுலா அலுவலர், விருதுநகர் அவர்களை தொடர்பு கொள்ளலாம். செல்.7397715688. என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S. அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
0
Leave a Reply