25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-ம் ஆண்டிற்கான ஓராண்டு ,ஈராண்டு தொழிற்பிரிவுகளில் சேர பயிற்சியாளர்களிடமிருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-ம் ஆண்டிற்கான ஓராண்டு ,ஈராண்டு தொழிற்பிரிவுகளில் சேர பயிற்சியாளர்களிடமிருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

  விருதுநகர் மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களான விருதுநகர் / அருப்புக்கோட்டை / சாத்தூர் / திருச்சுழி ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-ம் ஆண்டிற்கான ஓராண்டு / ஈராண்டு தொழிற்பிரிவுகளில் சேர பயிற்சியாளர்களிடமிருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இப்பயிற்சிக்கு இருபாலரும் (ஆண் / பெண்)  03.06.2026 முடிய இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி www.skilltraining.tn.gov.in ஆகும். பயிற்சிக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி / 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேல் பயின்ற அனைவரும் தகுதியானவர்கள்.

வயது வரம்பு ஆண்களுக்கு குறைந்தபட்ச வயது 14 முதல் அதிகபட்ச வயது 40 வரை மற்றும் மாற்றுத்திறனாளி / முன்னாள் இராணுவத்தினருக்கு விதிகளின்படி 5 ஆண்டு வயது வரம்பில் தளர்வு உண்டு. பெண்களுக்கு குறைந்தபட்சம் 14 முதல் அதிகபட்ச வயது உச்ச வரம்பு இல்லை. விண்ணப்பக்கட்டணமாக ரூ.50/-யை Debit Card / Credit Card / GPay/ Internet Banking ஆகியவற்றின் மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும்.

விருதுநகர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பொருத்துநர்  (Fitter), கடைசலர் (Turner), இயந்திர வேலையாள் (Machinist), கம்மியர் மோட்டார் வண்டி (MMV), குளிர்பதனம் மற்றும் தட்பவெப்பநிலை கட்டுபடுத்தும் தொழில்நுட்பவியலாளர் (R&AC Technician), கம்பியாள் (Wireman), பற்றவைப்பவர்  (Welder), உட்புற வடிவமைப்பு மற்றும் அலங்காரம் (Interior Design and Decoration), மேலும் தீயணைப்பு தொழிற்நுட்பம் மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு மேலாண்மை (Fire Technology and Industrial Safety Management) ஆகிய தொழிற்பிரிவு உள்ளன.

இப்பிரிவில் சேருவதற்கு மட்டும் 10-ம் வகுப்பு கல்வித்தகுதியும், உடற்கூறு தகுதியும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். (உயரம் 165செ.மீ, எடை 52 கிலோ, மார்பு விரிவதற்கு முன் 81 செ.மீ பின் 85 செ.மீ ). மேலும்,  Tata Technology மூலம் 4.0-வில் நவீன தொழிற்நுட்பங்களுடன் கூடிய தொழிற்பிரிவுகள் (Advanced CNC Machining Technician), (Mechanic Electric Vehicle), (Industrial Robotics & Digital Manufacturing)உள்ளன.

அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ / மாணவிகளுக்கு தமிழக அரசால் மிதிவண்டி / கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை / மாதாந்திர கல்வி உதவித் தொகை ரூ.750/- (வருகைக்கு ஏற்ப) / சீருடை 2 செட் (தையல்கூலியுடன்) / மூடு காலணி 1 செட்  / பாடப்புத்தகங்கள் / வரைபட கருவிகள் மற்றும் பயிற்சியாளர் அடையாள அட்டை/ அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் 6 முதல் 10 ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பெறும் ஆண் / பெண் பயிற்சியாளர்களுக்கு தமிழ்புதல்வன் / புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1000/- உதவித்தொகை வழங்கப்படுகிறது.

விருதுநகர்/அருப்புக்கோட்டை/சாத்தூர்/திருச்சுழி ஆகிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர 8-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பள்ளி மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் மின்னஞ்சல் முகவரி தொலைபேசி எண் விவரம் உள்ளிட்ட விவரங்களுடன் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அரசு தொழிற்பயிற்சி நிலைய தொலைபேசி எண்கள் : விருதுநகர்: 04562-294382 / 252655, அருப்புக்கோட்டை: 04566-225800 சாத்தூர்: 04562-290953 / திருச்சுழி: 9578855154 / 7010040810 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News