25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >>


கோடை காலம் தொடங்கியுள்ளதால், பொதுமக்கள் அனைவரும் உரிய நடைமுறைகளை பின்பற்றுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தகவல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கோடை காலம் தொடங்கியுள்ளதால், பொதுமக்கள் அனைவரும் உரிய நடைமுறைகளை பின்பற்றுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

கோடை காலம் தொடங்கியுள்ளதால், வெப்ப அலை தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தேவையின்றி மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்லவும், கடின உழைப்பு மேற்கொள்ளவும் தவிர்க்க வேண்டும்

 உலக வெப்பமயமாதல் காரணமாக வெப்பநிலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள கீழ்க்கண்ட வழிமுறைகளை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இலகுவான, வெளிர் நிறம் கொண்ட பருத்தி உடைகள் அணியவும், வெளியில் செல்லும் போது குடை, தொப்பி, கண்ணாடி, காலணிகள் பயன்படுத்த வேண்டும்.

 அதிக வெப்ப நேரங்களில் (12 மணி – 3 மணி) வெளிப்புற வேலைகளை தவிர்க்கவும். பயணிக்கும் போது போதுமான குடிநீர் எடுத்துச் செல்லவும், தாகம் இல்லாவிட்டாலும் அடிக்கடி தண்ணீர் குடிக்கவும், உடலில் நீரிழப்பு ஏற்படுத்தும் ஆல்கஹால், தேநீர், காபி, கார்பனேற்றப்பட்ட பானங்கள் தவிர்க்கவும். லஸ்ஸி, நீர்மோர், எலுமிச்சைச்சாறு போன்ற நீர்ச்சத்து பானங்களை அதிகமாக எடுத்துக்கொள்ளவும்.

 வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க திரைச்சீலைகள் மற்றும் சன்ஷேட்கள் பயன்படுத்தவும், குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளை நிறுத்தப்பட்ட வாகனங்களின் அருகில் விட வேண்டாம்.

 வேலை நேரத்தில் யாராவது மயக்கம் அடைந்தால், உடனடியாக குளிர்ச்சியான இடத்திற்கு மாற்றி தண்ணீர் அல்லது உப்பு சர்க்கரை கரைசல் கொடுக்க வேண்டும். அவசர தேவைகளுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடர்பு கொள்ளவும். வெப்ப அலை பாதிப்பு ஏற்பட்டால் அருகிலுள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்தில் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்.

 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வெப்ப அலை பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான படுக்கை வசதிகள் மற்றும் உப்பு சர்க்கரை கரைசல் (ORS) போதுமான அளவில் தயாராக கையிருப்பு உள்ளன. பொதுமக்கள் மேற்கண்ட அறிவுரைகளை கடைப்பிடித்து வெப்ப அலை தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்.மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News