ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: இந்திய பெண்கள் அணிக்கு தொடர்ந்து 4-வது வெற்றி.
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி மகளிர் ஹாக்கி தொடரில் இந்திய அணி தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சீனாவை 6-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தொடர்ந்து நான்காவது வெற்றியைப் பதிவு செய்தது.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்று வரும் 9-வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, சீனா, மலேசியா, தென் கொரியா, தாய்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன.
ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும் லீக் சுற்றில் இந்திய அணி தனது முதல் மூன்று போட்டிகளில் மலேசியா, தென் கொரியா மற்றும் தாய்லாந்து அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியிருந்தது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற நான்காவது லீக் ஆட்டத்தில் சீனாவை எதிர்கொண்ட இந்திய வீராங்கனைகள் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இறுதியில் இந்திய அணி 6-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.
0
Leave a Reply