தைராய்டு சுரப்பி பரிசோதனைகள்.
இ து ஒரு நாளமில்லாச் சுரப்பி. இது உடலின் வளர்சிதை மாற்றத்தை நிர்ணயிக்கிறது. கழுத்தின் முன் பகுதியில் இது உள்ளது. பருவ வயதிலும், கர்ப்பக் காலத்திலும் இச்சுரப்பி இயற்கையாகவே சற்றுப் பெரிதாகக் காணப்படும்.தைராய்டு சுரப்பி அதிகமாகச் சுரந்தால்'தைரோடாக்சிகோஸிஸ்'எனவும், குறைந்தால்'மிக்ஸ்சோடிமா' எனவும் கூறுவர். குழந்தையின்மை, மாதவிடாய்க் கோளாறு, மலச்சிக்கல்,பேதி,மன அழுத்தம், உடல் பருமன்,உடல் எடை சரிவு, ரத்தச்சோகை போன்ற பல நோய்களுக்கு தைராய்டு காரணமாக உள்ளது. வயதானவர்களுக்கு, தீர்க்கக்கூடிய ஞாபக மறதியில் தைராய்டு குறைபாடு முக்கியப் பங்கு வகிக்கும். நீரிழிவு, கொலஸ்டிரால் மற்றும் தைராய்டு குறைபாடு பல நோய்களோடு சேர்ந்து காணப்படும்.
முதுமையில் முக்கியமாக பெண்களுக்கு தைராய்டு சுரப்பி குறைவாக ஏற்படும் அறிகுறிகளான உடல் பருமன், மாதவிடாய் தொல்லைகள், தலைமுடி கொட்டுதல், சருமம் தடிப்பு, சருமத்தில் வறட்சி மற்றும் மலச்சிக்கல் போன்ற தொல்லைகள் ஏதுமில்லாமல் இருக்கும். தொல்லைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து மருத்துவரை நாடி தைராய்டு பரிசோதனை செய்துகொள்வது மிகவும் அவசியம்.தைரோடாக்சிகோஸிஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் மெலிந்து இருக்கும், பசி அதிகரிக்கும், எப்பொழுதுமே ஒரு விதப் பதற்றத்துடனே இருப்பார்கள்.நாடித்துடிப்பு அதிகமாக இருக்கும். நோயை ரத்தப் பரிசோதனை மூலமும், ஸ்கேன் டெஸ்ட் மூலமும் எளிதில் கண்டறிய முடியும்.
கழுத்துப் பகுதியில் தைராய்டு கட்டியில் வீக்கம் இருந்தால் அதைக் கண்டறிய அல்ட்ராசவுண்ட், ஸ்கேன் மற்றும் பயாப்ஸி போன்ற பரிசோதனைகள் தேவைப்படலாம். தைராய்டு ஆன்டிபாடி பரிசோதனை மற்றும் ரேடியோ ஆக்டிவ் அயோடின் மேம்படுத்தல் சோதனை செய்யவேண்டும். தைராய்டு சுரப்பி எவ்வாறு செயல்படுகிறது என்பதை தைரோடாக்சிகோஸிஸ்க்கான காரணத்தையும் கண்டறிய உதவுகிறது.
0
Leave a Reply