மூத்த குடிமக்கள் இன்றைய தலைமுறையினருக்கு இடையேயான பிணைப்பினை வளர்க்கும் “தலைமுறைகள் பேசட்டும்” கலந்துரையாடல்.
விருதுநகரில் உள்ள விருட்சம் முதியோர் இல்லத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தலைமையில் மூத்த குடிமக்கள் இன்றைய தலைமுறையினருக்கு இடையேயான பிணைப்பினை வளர்க்கும் “தலைமுறைகள் பேசட்டும்” கலந்துரையாடல் (24.11.2026) நடைபெற்றது.இன்றைய தலைமுறையினரை உருவாக்கியவர்கள் தான் இன்று மூத்த குடிமக்களாக உள்ளனர். அவர்களை அன்போடும், அரவணைப்போடும் பாதுகாப்பது அனைவரின் கடமையும், பொறுப்பும் ஆகும்.
மூத்த குடிமக்கள் நமது குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் வழிகாட்டிகளாகத் திகழ்பவர்கள். அவர்கள் தங்களது வாழ்நாள் அனுபவங்கள், அறிவு, பண்பாடு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய விழுமியங்கள் மூலம் இளைய தலைமுறையினருக்கு சிறந்த வழிகாட்டுதல்களை வழங்கி வருகின்றனர். மூத்த குடிமக்களின் அனுபவங்களையும் அறிவுரைகளையும் இன்றைய இளம் தலைமுறையினர் மதித்து ஏற்றுக்கொண்டு வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும்.
இன்றைய வேகமான வாழ்க்கைச் சூழலில் தலைமுறைகளுக்கு இடையிலான இடைவெளி அதிகரித்து வரும் நிலையில், அதனைக் குறைத்து அன்பு, பாசம், மரியாதை மற்றும் பரஸ்பர புரிதலை மேம்படுத்துவது அவசியமாகும். இதனை முன்னிறுத்தியே “தலைமுறைகள் பேசட்டும்” என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களின் அறிவும் அனுபவமும் இளைய தலைமுறையினரின் எதிர்கால வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைகின்றன. எனவே, குடும்பத்திலும், சமூகத்திலும் மூத்த குடிமக்களுக்கு உரிய அங்கீகாரத்தையும் மரியாதையையும் வழங்கி, தலைமுறைகளுக்கு இடையிலான நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் தொடர்ந்து பேணிப் பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
முன்னதாக பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பான விழிப்புணர்வு கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி திலகம், அரசு அலுவலர்கள், முதியோர்கள், கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply