25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


4 ஆவது புத்தகக் கண்காட்சியில், வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் - 2026 தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மற்றும் பொது மக்களுக்கான சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கும் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் - 2026 சிறப்பு  ஆலோசனை அரங்கம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

4 ஆவது புத்தகக் கண்காட்சியில், வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் - 2026 தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மற்றும் பொது மக்களுக்கான சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கும் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் - 2026 சிறப்பு  ஆலோசனை அரங்கம்.

விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் 4 ஆவது புத்தகக் கண்காட்சியில், வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் - 2026 தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மற்றும் பொது மக்களுக்கான சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கும் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் - 2026 சிறப்பு  ஆலோசனை அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.01.01.2026 தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்களை திருத்தம் செய்வதற்கான சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுவீடாகச் சென்று கணக்கெடுப்புப் படிவங்களை வழங்கியும், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வாக்காளர்களிடமிருந்து திரும்பப் பெற்றும் வருகின்றனர். மேலும், பெறப்பட்ட படிவங்கள் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

                        இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைக் கண்டறிவதற்கு உதவி செய்வதற்காகவும், படிவங்களை நிரப்புவதற்கும் பல்வேறு முன்னெடுப்புகள் மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, விருதுநகர் கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி பொருட்காட்சி மைதானத்தில் நடைபெற்று வரும் விருதுநகர் 4 ஆவது புத்தகக் கண்காட்சியில் அரங்கம் எண் 28-ல் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் - 2026 சிறப்பு  ஆலோசனை அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த அரங்கத்தில், சிறப்புத் தீவிரத் திருத்தம் - 2026 மூலம் நடைபெற்று வரும் பணிகளின் முக்கிய தினங்கள், வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை நிரப்புவது, 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரையோ அல்லது தங்களின் தந்தை/தாய்/தாத்தா/பாட்டி பெயர்களைக் கண்டறிவதற்கும் ஆலோசனைகள் மற்றும் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.எனவே, வாக்காளர்கள் இந்த சிறப்பு ஆலோசனை மையத்தில், வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் - 2026 தொடர்பான சந்தேகங்களை கேட்டறிந்து, பயன்பெறுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News