ஆகஸ்ட் 6 ஹிரோஷிமா தினம்
இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா தலைமையிலான நேச நாட்டுப்படையிடம் சரணடைய மறுத்தது, ஜப்பான். அதை பணிய வைக்க அணுகுண்டு ஆயுதத்தை பயன்படுத்த முடிவு செய்தது அமெரிக்கா.
உலகில், முதன் முதலில் அணுகுண்டு வீசி அதனால் ஏற்படும் அழிவை சோதனை செய்ய விரும்பியது. இதன் வாயிலாக உலகப்போர் உடனே முடிவுக்கு வரும். அதே நேரம் உலக நாடுகளில் அமெரிக்காவின் மதிப்பு உயரும். இவ்வாறு கணக்கு போட்டனர் அமெரிக்க தலைவர்கள்.கிழக்காசிய நாடான ஜப்பானில் உள்ளது ஹிரோஷிமா. உலக வரலாற்றில் மிகத் துயரமான நிகழ்வை சந்தித்தமுதல்நகரம்.இரண்டாம் உலகப் போரின் போது ஆகஸ்ட் 6, 1945ல் இந்த நகர் மீது அணுகுண்டு வீசப்பட்டது. மனித வீபரீதத்தால் அந்த நகரம் உருகுலைந்து போனது.
அங்கு வசித்த,80 ஆயிரம் பேர் உடனடியாக பலியாயினர். இது நகரத்தின் மொத்த மக்கள் தொகையில், 40சதவீதம். நகரில் மூன்றில் இரண்டு பகுதி சிதைந்து அழிந்தது, சின்னாபின்னமானது. பலருக்கு தோல் உரிந்து போனது வாய் இருக்க வேண்டிய இடத்தில் ஓட்டை மட்டுமே தென்பட்டது. கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டோரால் அதன்பின் பேச முடியவில்லை. வெட்டுக்கிளி போல சத்தம் மட்டுமே எழுப்ப முடிந்தது. காயத்துடன் தப்பியோர் கடும் அவதிப்பட்டு இறந்தனர்.
இந்த கொடுரத்தை மக்களுக்கு நினைவு படுத்தும் விதமாக, 'ஹீரோஷிமா தினம்' ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் இரங்கல் நிகழ்வுகள், அமைதிப்பேரணிகள், அணு ஆயுத எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன.அணுகுண்டுக்கு எதிராக ஐப்பான் தலைநகர் டோக்கியோவில், 1964ல் ஒரு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது. அங்கு அமைதியின் சுடர் என்ற பெயரில் அணையா விளக்கு ஏற்றப்பட்டுள்ளது. அணு ஆயுதப் போருக்கு எதிராக மக்களை பாதுகாக்கும் சின்னமாக விளங்குகிறது.
0
Leave a Reply