வேளாண்மைத்துறையின் மூலம் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சார ஊர்தி
வேளாண்மைத்துறையின் மூலம் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சார ஊர்திகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று(07.10.2024) வேளாண்மைத்துறையின் மூலம் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் சிறுதானியங்களில் சாகுபடியினை அதிகரித்தல், சிறுதானிய உணவு உட்கொள்வதனை அதிகரித்தல், சிறுதானிய பயிர்களுக்கான அரசின் திட்டங்கள் மற்றும் மானியங்கள் உள்ளிடவைகள் குறித்து, விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சார ஊர்திகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த வாகனங்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று, சிறுதானியங்களில் சாகுபடியினை அதிகரித்தல் குறித்தும், சிறுதானிய உணவு உட்கொள்வதனை அதிகரிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், சிறுதானிய பயிர்களுக்கான அரசின் திட்டங்கள் மற்றும் மானியங்கள் உள்ளிடவைகள் குறித்தும், விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே எடுத்துக் கூறியும், துண்டு பிரசுரங்கள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளது.
இந்நிகழ்வில், வேளாண்மை இணை இயக்குநர் திருமதி க.விஜயா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) திருமதி நாச்சியார் அம்மாள், வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) திருமதி சுமதி மற்றும் அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள், வட்டார உதவி வேளாண்மை அலுவலர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply