சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ், குழந்தை திருமணம் தடுப்பிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், விருதுநகர் மாவட்ட ம் பழைய பேருந்து நிலையத்தில் இன்று (09.10.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்களின் தலைமையில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ், நாட்டுப்புற கலைஞர்களை கொண்டு குழந்தை திருமணம் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி, நடத்தப்பட்டு உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டன.அதன் ஒரு பகுதியாக நாட்டுப்புற கலைக் குழுவினரின் நாடகம் மற்றும் பாடல் வழியே, பெண் குழந்தை திருமணம் குறித்தும், இளம் வயது கர்ப்பம் குறித்தும், மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இலவச எண்கள் (1098 (ம) 181 ) ஆகியவை குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டன.
இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் கி.திலகம், மாவட்ட சமூக நல அலுவலக களப்பணியாளர்கள், மாவட்ட மகளிர் அதிகார மையம் பணியாளர்கள், ஒருங்கிணைந்த சேவை மையம் பணியாளர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளர், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply