25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்.

சிவகாசி, ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரியில் விருதுநகர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சைமா அறக்கட்டளை   இணைந்து மத்திய, மாநில அரசின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டமான "பெண் குழந்தைகளை காப்போம்! பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்!! "  மூலம்"குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்" ஏற்பாடு செய்திருந்தனர்.

 கல்லூரியின் துணை முதல்வர் முனைவர். முத்துலட்சுமி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

சிறப்புரையில்,திருமதி கி. திலகம், மாவட்ட சமூக நல அலுவலர்,கல்லூரி

முதல்வர், முனைவர். பாலமுருகன் அவர்கள் துவங்கி வைத்து உரையாற்றினாரகள். 

மேலும் இந்த கருத்துரங்கில் மனநல ஆலோசகர், திருமதி. கெங்கா விஜயராகவன், குழந்தைகள் நலக்குழு, உறுப்பினர் .

திருமதி ஜெபா கிறிஸ்டினா,குழந்தை ஆலோசனை உளவியலாளர், 

திருமதி. ராதிகா ராமன், சிவகாசி ரோட்டரி கிளப் ஆப் ஸ்பார்க்ளர் அமைப்பின் தலைவர் திரு.  ஞானப்பிரகாசம், ஸ்ரீவில்லிபுத்தூர்

 சைமா அறக்கட்டளையின் இயக்குனர்  வழக்கறிஞர் ராஜகோபால், ஆகியோர் கலந்துகொண்டு கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு கருத்துக்கள் மூலம்  விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். 

சிறப்பு அழைப்பாளர்கள்  ,குழந்தை திருமணத்தின் சமூக, கல்வி மற்றும் சட்டப் பாதிப்புகளை விளக்கி, தடுப்பு நடவடிக்கைகளின் அவசியத்தை வலியுறுத்தினர்.

 மேலும்குழந்தை திருமணங்களை தடுக்கும் அரசு நடவடிக்கைகள், புகார் முறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் குறித்தும்,  

 குழந்தை திருமணத்தை தடுத்திட உளவியல் தலையீடுகள் மற்றும் குடும்ப ஆலோசனையின் முக்கியத்துவம்,  குழந்தை திருமணம் தடுத்திட  சட்டப்பூர்வ விளக்கங்களையும்,   தடுப்பதில் மாணவ, மாணவிகளின் பங்கு குறித்தும் எடுத்துரைத்தார்கள். 

 இறுதியாக குழந்தை திருமண தடுப்பு யுக்திகள் மற்றும் தொடர் செயல்பாடுகள் குறித்து விளக்கி, மாணவர்களை சமூக மாற்றத்திற்கான தூதர்களாக உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்கள். 

நிகழ்ச்சியில் வந்து கொண்ட அனைவரும் “குழந்தை திருமணத்தை எதிர்த்து நிற்போம்” என்ற உறுதிமொழியை  இணைந்து ஏற்றனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *