25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


சிவகாசி மாநகராட்சிப் பகுதிகளில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், துண்டு பிரசுரங்கள் மற்றும் ஒட்டு வில்லைகள் மூலம் விழிப்புணர்வு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிவகாசி மாநகராட்சிப் பகுதிகளில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், துண்டு பிரசுரங்கள் மற்றும் ஒட்டு வில்லைகள் மூலம் விழிப்புணர்வு.

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் - 2026-னை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையிலும், "என் வாக்கு விற்பனைக்கு அல்ல" என்பதை வலியுறுத்தியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியில்  (11.04.2026) பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

துண்டு பிரசுரங்கள் மற்றும் ஒட்டு வில்லைகள் (Stickers):

          ஜனநாயகக் கடமையை தவறாமல் ஆற்ற வாக்காளர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கியும், “என் வாக்கு, என் குரல்” என்ற வாசகங்கள் அடங்கிய ஒட்டு வில்லைகள் (Stickers) வீடு வீடாகச் சென்று ஒட்டியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

உறுதிமொழி ஏற்பு:

          தொடர்ந்து, "எனது வாக்கு விற்பனைக்கு அல்ல" மற்றும் "ஜனநாயகக் கடமையை தவறாமல் ஆற்றுவேன்" என்ற உயரிய நோக்கை வலியுறுத்தி, மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் இணைந்து நேர்மையாகவும், தவறாமலும் வாக்களிப்போம் என விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News