பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்த பாலமேடு ஜல்லிக்கட்டு.
பாலமேட்டில் கிராமப் பொது மகாலிங்க சுவாமிகள் மடத்துக் கமிட்டி சார்பில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைத்தார்.
மலைக்க வைக்கும் திமில்களை சிலுப்பிக்கொண்டு, மிரட்சி பார்வையில் முரட்டுக் கொம்புகளுடன் 'தொட்டுப்பார்' என சீறிப் பாய்ந்த காளைகளும், விடலைக் கரங்களுடன் தாவிப் பாய்ந்து வந்து பார்' என அடக்கிய வீரர்களும் களம்கண்ட மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு, பார்வையாளர் களை பரவசமாக்கியது.
முதலாவதாக ஏழு 'மரியாதை காளைகள்' அவிழ்த்து விடப்பட்டன. அவற்றை வீரர்கள் பிடிக்கவில்லை. அந்த மாடுகளுக்கு பரிசு அறிவிக்கப்பட்டது. முதல் சுற்று காலை மணிக்கு 9:35 துவங்கியது. 50 வீரர்கள் மஞ்சள் கலர் சீருடை அணிந்து களம் இறங்கினர்.
வாடிவாசலில் இருந்து துள்ளிக் குதித்து வெளியேறிய காளைகளை வீரர்கள் சுற்றி வளைத்து அடக்க முயற்சித்தனர். வலுவான திமில் கொண்ட காளைகள் வீரர்களை முட்டி பந்தாடியதும், தீரம் கொண்ட வீரர்கள் விடாப் பிடியாக, காளைகளை அடக்கி வெற்றி பெற்றதும் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
0
Leave a Reply