25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >>


பசலை கீரை பன்னீர் கிரேவி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பசலை கீரை பன்னீர் கிரேவி.

தேவையான பொருட்கள்:
பசலை கீரை (Palak) - 1 கட்டு (சுத்தம் செய்தது) ,
பன்னீர் - 200 கிராம் (சிறு துண்டுகளாக நறுக்கியது) ,
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) ,
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது அல்லது அரைத்தது),
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி,
பச்சை மிளகாய் – 2,
சீரகம் - 1 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி,
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி,
தனியா (மல்லி) தூள் - 1 தேக்கரண்டி,
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி,
கஸ்தூரி மேத்தி (உலர்ந்த வெந்தய இலை) - 1 தேக்கரண்டி,
வெண்ணெய் அல்லது நெய்/எண்ணெய் - 2 மேசைக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.


செய்முறை:
முதலில் பசலை கீரையை நன்றாகக் கழுவிக்கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, அதில் கீரை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள் மட்டும் வேகவிடவும். வெந்ததும் கீரையை உடனே எடுத்து குளிர்ந்த நீரில் (Ice water) போடவும். இதனால் கீரையின் பச்சை நிறம் மாறாது.
பிறகு இதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுதாக (Paste) அரைத்துக்கொள்ளவும். கடாயில்வெண்ணெய் அல்லது எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் சேர்க்கவும்.
நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
அதன்பின் நறுக்கிய தக்காளி சேர்த்து அது குழைந்து வரும் வரை வதக்கவும்.மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும்.மசாலா நன்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள பசலை கீரை விழுதை அதனுடன்
சேர்க்கவும்.
தேவையான அளவு தண்ணீர் மற்றும் கரம் மசாலா சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.இப்போது நறுக்கி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை கிரேவியில் சேர்க்கவும். (விரும்பினால்பன்னீரைலேசாகநெய்யில்வறுத்துவிட்டுசேர்க்கலாம்).இறுதியாக கஸ்தூரி மேத்தியை கைகளில் நசுக்கி மேலே தூவி, ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.சுவையான மற்றும் ஆரோக்கியமான பசலை கீரை பன்னீர் கிரேவி தயார். இதை சப்பாத்தி, நான் அல்லது சூடான சாதத்துடன் பரிமாறலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News