25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


வாழைப்பழ வகைகளும், ஆரோக்கிய பலன்களும்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வாழைப்பழ வகைகளும், ஆரோக்கிய பலன்களும்

செவ்வாழை

செவ்வாழையில் வைட்டமின் ஏ, சி, கால்சியம், இரும்புச்சத்து, பீட்டாகரோட்டின் உள்ளன.செவ்வாழை சாப்பிட, குதிகால் வலி போகும். விந்துஅணுக்கள் அதிகரிக்கும்.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பார்வைத்திறன் மேம்படும்.பல்வலி நீங்கும். ஈறுகள் உறுதியாகும்.தினசரி செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவர சொறி, சிரங்கு, தோல் வெடிப்பு நீங்கும்.நரம்புத்தளர்ச்சி குணமடையும். நோய்த்தொற்றுக்கள் நீங்கும். 

ரஸ்தாலி (ரசகதலி)

பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், வயிற்று எரிச்சலைக் குறைப்பதுடன் அல்சரையும் சரிசெய்கிறது. அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால், செரிமானப் பிரச்னைகளைப் போக்கும்.ரஸ்தாலியில் உள்ள வைட்டமின் பி6 மற்றும் குளுக்கோஸ், மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.வாத உடல் உள்ளவர்கள், ரஸ்தாலியை அளவாகச் சாப்பிடலாம்.வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும்.  

மொந்தன் வாழை  ( பச்சை வாழை)

மொந்தன் வாழை சாப்பிட, மலச்சிக்கல் நீங்கும். வாந்தியை நிறுத்தும்.இரும்புச்சத்துடன் அதிக அளவு மாவுச்சத்தும் இருப்பதால், நன்கு பசி தாங்கும். உடல் வளர்ச்சியை மேம்படுத்தும். தினம் ஒன்றோ, இரண்டோ உணவுக்குப் பின் சாப்பிட்டால், உடல் வெப்பத்தைத் தணிக்கும். சில வகை காமாலையைக் கட்டுப்படுத்தும்.மொந்தன் வாழைக்காயைச் சாப்பிடுவதால், வயிறு இரைச்சல், கழிச்சல், வாயில் நீர் ஊறுதல், இருமல் நீங்கும்.இந்தப் பழத்துக்கு `பொந்தன் வாழை’ என இன்னொரு பெயரும் உண்டு. 

நாட்டு வாழை

நாட்டுவாழையின் தோல் பகுதி தடிமனாக இருக்கும். தோலிலும் சத்துக்கள் அதிகம்.மலச்சிக்கல், குடல்புண்ணைக் குணப்படுத்தும்.மக்னீசியம் அதிகமாக இருப்பதால், உடல்நலம் காக்கும்.கால்சியம் அதிகமாக உள்ளதால், எலும்புகளுக்கு வலு கொடுக்கும்.பெண்கள் நாட்டு வாழைப்பழத்தைச் சாப்பிட்டுவர, உடலுக்கு சக்தி பெருகும்.மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்யும். வெள்ளைப்போக்கைக் கட்டுப்படுத்தும்.அதிகம் இனிப்புச்சுவை கொண்டுள்ளதால், சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.   

கதலி

கதலியில், `நெய்க் கதலி’ என்றொரு வகையும் உள்ளது.நெய்க் கதலி மலைப்பகுதிகளில் அதிகம் விளையும். அதிக இனிப்புச்சுவை உடையது. மாவுச்சத்து அதிகம் என்பதால், குழந்தைகள் உடல் வளர்ச்சி பெற உதவும்.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ரத்தசோகை பிரச்னை உடையவர்கள் சாப்பிட்டுவந்தால், ரத்தம் பெருகும்.மலச்சிக்கலைத் தீர்க்கும். குடல்புண்ணைக் குணப்படுத்தும்.சித்தமருத்துவ மருந்துகளுக்கு அதிகம் பயன்படுகிறது.பெண்களின் உடல்நலம், மாதவிடாய் பிரச்னைகள், உடல் சூடு ஆகியவற்றைப் போக்கும்.  

பேயன் ( நாட்டு வாழை )

கடினமான தோல் கொண்ட இனிப்புச்சுவை உள்ள பழம். இதன் தோலிலும் சத்துக்கள் அதிகம்.அதிக உடல் வெப்பத்தை பேயன்பழம் சாப்பிடுவதன் மூலம் சமன்படுத்தலாம்.குழந்தைகளுக்கு ஏற்படும் கணையச்சூட்டைத் தணிக்கும் இயல்பு கொண்டது.உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. உடல் எடையை அதிகரிக்கும்.மலச்சிக்கலை நீக்கும். குடல் புண்ணைக் குணப்படுத்தும்.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.மாவுச்சத்து அதிகம் உள்ளதால், குழந்தைகளின் வளர்ச்சிக்குச் சிறந்தது.குளிர்ச்சியான உடல்வாகு உடையவர்கள் இந்தப் பழத்தைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இது நுரையீரலில் சளியைக் கோத்து நுரையீரல் கோளாறுகளுக்கு வழிவகுத்துவிடும். 

மலை வாழை

வாத நோய்க்காரர்களைத் தவிர மற்றவர்கள் இந்தப் பழத்தைச் சாப்பிடலாம்.நல்ல ருசியும் வாசனையும் கொண்ட பழம். இது, உடலின் வலிமையை அதிகரிக்கும்.சிறு மலைப்பழம் என்றொரு வகை உண்டு. இது, மிகவும் இனிப்பாக இருக்கும். ரத்தசோகையை நீக்கும். ரத்த விருத்தி ஏற்பட்டு, உடல் வலுப் பெறும்.மலச்சிக்கல் நீங்கும். மாதவிடாயின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும்.இந்தப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டுவர, உடல் அழகு பெறும்.  

பூவன் பழம்

தினசரி உணவு உண்ட பின், பூவன் வாழைப்பழத்தைச் சாப்பிட்டுவர, மலச்சிக்கல் தீரும். செரிமான சக்தியை அதிகரிக்கும்.தசைகளை வலுவாக்கும்.தினமும் பூவன் வாழைப்பழம் உண்டுவர, உடல் சோர்வு, தளர்வு நீங்கி, புத்துணர்ச்சி உண்டாகும்.ஆஸ்துமா, நெஞ்சுச்சளி பிரச்னை, குளிர்ச்சியான உடல்வாகு கொண்டவர்கள், சர்க்கரை நோயாளிகள் பூவன் வாழைப்பழத்தைத் தவிர்ப்பது நல்லது.இரண்டு நாட்களுக்கு, ஒரு வேளை உணவைத் தவிர்த்துவிட்டு, அதற்கு பதில், பூவன் வாழைப்பழத்தை சாப்பிட்டால், செரிமானப் பிரச்னைகள் நீங்கும். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News