25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


வாழைப்பழ கோதுமை மாவு அப்பம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வாழைப்பழ கோதுமை மாவு அப்பம்.

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப்,
பேக்கிங் சோடா-சிட்டிகை (விருப்பம்),
நன்கு பழுத்த வாழைப்பழம் - 2,
தண்ணீர்-தேவையான அளவு,
வெல்லம் - 1/2 கப்,
சிறிய துண்டுகளாக நறுக்கிய தேங்காய் -2 டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய் - 3,
நெய் -1 டீஸ்பூன் (தேங்காய் வறுக்க),
சிட்டிகை உப்பு,
நெய் அல்லது எண்ணெய் -அப்பம் சுட தேவையான அளவு.


செய்முறை:
மிக்ஸி ஜாரில் வாழைப்பழம், கோதுமை மாவு, வெல்லம், ஏலக்காய், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் (Bowl) ஊற்றிக் கொள்ளவும்ஒரு வாணலியில் நெய் சேர்த்து, சிறிய துண்டுகளாக நறுக்கிய தேங்காயை லேசாக பொன்னிறமாக வறுத்து, மாவில் சேர்த்து நன்றாக கலக்கவும்.
விருப்பப்பட்டால் சிட்டிகை பேக்கிங் சோடா சேர்த்து 10-15 நிமிடங்கள் ஓய்வெடுக்க விடவும். அப்பம் கல் அல்லது பணியாரக்கல்லை சூடாக்கி, சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் தடவவும். மாவை ஊற்றி இருபுறுமும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும்.

குறிப்பு:
வாழைப்பழம் நன்கு பழுத்ததாக இருந்தால் அப்பம் மிகவும் மென்மையாகவும், இயற்கையான இனிப்புடனும் சுவையாகவும் இருக்கும். வறுத்த தேங்காய் துண்டுகளை சேர்ப்பதால் அப்பம் இன்னும் சுவையாகவும், ஒவ்வொரு கடியிலும் அருமையான மொறுமொறு உணர்வுடனும் இருக்கும்.சுவையான & சத்தான அப்பம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News