25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


முடி  கொட்டுவதை  தடுக்கும்  பாரிஜாதபூ .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முடி  கொட்டுவதை தடுக்கும்  பாரிஜாதபூ .

பாரிஜாத பூக்கள் வெள்ளை நிற இதழ்களோடு மிகவும் அழகாக இருக்கக்கூடும். அதில் ஆன்டிஆக்ஸிடன்டுகள் மற்றும் வைட்டமின்கள் இருப்பதால், கூந்தல் ஆரோக்கியத்திற்கு, ஏற்றதாக கருதப்படுகிறது. பாரிஜாத பூ, உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, மயிர்கால்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த செய்கிறது.

இந்த பூ அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பதால், முடி வளர்ச்சியை பாதிக்கும் பொடுகு மற்றும் பிற உச்சந்தலை நோய்த்தொற்று பிரச்சனைகளை சரிசெய்ய உதவக்கூடும்.

இந்த பூவில் காணப்படும் ஃபிளாவனாய்டுகள், சுற்றுச்சூழல் மாசு மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து கூந்தலை பாதுகாக்கக்கூடும். இதனை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால், கூந்தல் மென்மையாகவும், பளபளப்பாகவும் மாறக்கூடும் .

பாரிஜாத பூ மற்றும் தேங்காய் எண்ணெய் காம்போ, உச்சந்தலைக்கு ஊட்டச்சத்து அளித்து ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. முடி இழைகளை வலுப்படுத்தி முடி உடைதலை தடுக்கவும் பயன்பெறுகிறது.

கூந்தலில் பல பிரச்சனைகளுக்கு பாரிஜாத பூ பேஸ்ட் சிறந்த தீர்வாகும் இருக்கும். குறிப்பாக, முடி உதிர்தல், பொடுகு மற்றும் வழுக்கை தலை பிரச்சனையை சரிசெய்யக்கூடும். இதனை வாரத்திற்கு குறைந்தது 2 முறையாவது பயன்படுத்த வேண்டும்.

பாரிஜாத பூக்களை தண்ணீரில் அலசிவிட்டு, அவை பேஸ்ட் பதத்திற்கு வரும் வரை நன்றாக நசுக்கவும். அத்துடன் வெந்தய விதை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும். பிறகு, அந்த பேஸ்டை உச்சந்தலை மற்றும் கூந்தலில் தடவி 15 நிமிடங்கள் ஆனதும் சுத்தமான தண்ணீரில் அலச வேண்டும்.

பாரிஜாத பூ தண்ணீர், முடி உடைதலை தடுக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கக்கூடும். வாரத்திற்கு 2 அல்லது 3 முறையாவது பாரிஜாத தண்ணீரில் முடியை அலசி வந்தால், பல கூந்தல் பிரச்சனைகள் நீங்கக்கூடும்.

 பாரிஜாத பூக்களை தண்ணீரில் 2 அல்லது 3 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு, பூக்களை நீக்கிவிட்டு அந்த தண்ணீரை கொண்டு முடியை நன்றாக கழுவ வேண்டும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News