உண்டியல்
எவ்வளவு தான் பணம் சேர்த்து வைத்தாலும் பணம் உங்களிடம் தங்கவில்லை என்றால் இப்படி செய்து பாருங்கள் முதலில் மண்ணால் செய்யப்பட்ட ஒரு உண்டியல் வாங்கி வந்து அதனை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து அந்த உண்டியல் உள்ளே சிறிது பச்சை கற்பூரம் மற்றும் இரண்டு ஏலக்காய் அந்த உண்டியல் உள்ளே போட்டுக் கொள்ள வேண்டும்,பிறகு வெள்ளிக்கிழமை காலையில் வரும் குளிகை நேரத்தில் உங்கள் வீட்டில் பூஜை அறையில் அந்த உண்டியலை வைத்து பூஜை செய்து விட்டு அந்த உண்டியலில் உங்களால் எவ்வளவு முடியுமோ 5 ரூபாய் அல்லது 11 ரூபாய் முதலில் போடும் பணம் ஒற்றை இலக்கில் இருக்க வேண்டும். அடுத்த நாள் முதல் உங்கள் கையில் எவ்வளவு போட முடியுமோ அவ்வளவு பணம் போடாலாம் பணம் போடும் போது உங்கள் குலதெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் மனமுருகி வேண்டி போடவேண்டும். ஏனெனில் குளிகை நேரத்தில் செய்யும் எந்த ஒரு செயலும் பல மடங்கு பெருகும்.
0
Leave a Reply