பக்தர்களை வா என அழைத்து அருளும் சுந்தரராஜப்பெருமாள்,
பக்தர்களை வா என அழைத்து அருளும் சுந்தரராஜப்பெருமாள், சிவகங்கை மாவட்டம் வேம்பத்துாரில் கோயில் கொண்டிருக்கிறார். இங்கு தரப்படும் மந்திர விபூதியைப் பூசினால் நோய் தீரும்.
கவிகால ருத்ரர் என்ற புலவரின் கனவில் தோன்றிய பெருமாள் அடியெடுத்துக் கொடுத்து பாடுவதற்கு அருள்புரிந்தார். இதன் அடிப்படையில் மன்னர் ஜடாவர்ம குலசேகரன் கோயிலைக் கட்டினார்.
சுந்தரராஜப்பெருமாள் என சுவாமிக்கு திருநாமம் சூட்டப்பட்டது. ஆகூய் வரதராக' இங்கு அருள்புரிகிறார். 'இடதுகையால் வா என அழைத்து வலதுகையால் அருள்புரிபவர்' என பொருள். இடதுகை விரல்களை வளைத்து பக்தர்களை அருகில் அழைத்து வலது கையால் வரம் தருபவராக இருக்கிறார். மேலிரு கைகளில் சங்கு, சக்கரம் உள்ளன. மார்பில் மகாலட்சுமி இருக்கிறாள். பூமிதேவி, நீளாதேவி அருகில் உள்ளனர்.
இங்கு தரிசித்தவருக்கு வைகுண்டத்தை தரிசித்த புண்ணியம் சேரும் என்பதால் இத்தலம் 'விண்ணகரம்' எனப்படுகிறது. இங்கு சுதர்சன சக்கரத்தை விபூதியில் வைத்து விஷ்ணு சகஸ்ர நாமம், சுதர்சன மந்திரங்களை ஜபிக்கின்றனர். சாயந்தர பூஜை முடிந்ததும் நோய் தீர்க்கும் பிரசாதமான மந்திர விபூதி தரப்படுகிறது. விருப்பம் நிறைவேற வராகருக்கு பூப்பந்தல் இட்டு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். ஹயக்ரீவர், கருடாழ்வார், ஆஞ்சநேயர், சுந்தரராஜ விநாயகர், பதினெட்டாம்படி கருப்பண்ணசுவாமிக்கு சன்னதிகள் உள்ளன.
பாண்டிய மன்னரின் சார்பாக 2008 அந்தணர்களுக்கு தானம் செய்ய ஏற்பாடானது. அதில் ஒருவர் மட்டும் குறைந்ததால், வேம்பத்துார் குளக்கரை விநாயகரே அந்தணராக வந்து தானம் பெற்றார். இதன் அடிப்படையில் குளக்கரை விநாயகரோடு மற்றொரு விநாயகரும் இருக்கிறார். 'இரண்டாயிரத்தெண் விநாயகர்' என்னும் இவரை நீரில் மூழ்க பொழியும். 'இரண்டாயிரத்தெண்' வைத்து வருண ஜபம் செய்தால் மழை பொழியும்.'இரண்டாயிரத்தெண் ' என்பதற்கு இரண்டாயிரத்து எட்டு என பொருள்.
0
Leave a Reply