25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


பிரட் சில்லி (Bread Chilli)
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பிரட் சில்லி (Bread Chilli)

தேவையான பொருட்கள்:

பிரட் - 5-6 துண்டுகள்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
குடைமிளகாய் - 1/4 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி, பூண்டு - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1-2
தக்காளி சாஸ் - 1 மேசைக்கரண்டி
சோயா சாஸ் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய்/நெய் - வறுக்க
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு

 
செய்முறை:
பிரட் துண்டுகளின் ஓரங்களை நீக்கிவிட்டு, அவற்றைச் சிறிய சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும். ஒரு கடாயில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி, பிரட் துண்டுகளைப் பொன்னிறமாகும் வரை வறுத்து தனியே வைக்கவும்.
அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின் வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
மிளகாய் தூள், தக்காளி சாஸ், சோயா சாஸ் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
வறுத்து வைத்துள்ள பிரட் துண்டுகளைச் சேர்த்து, மசாலா அனைத்து பக்கங்களிலும் படுமாறுமிதமான தீயில் கிளறவும். இறுதியாகக் கொத்தமல்லி இலைகளைத் தூவி பரிமாறவும். 
பிரட் வறுக்கும்போது கருகிவிடாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ளவும், அப்பொழுதுதான் மொறுமொறுப்பாக இருக்கும்.
மிகவும் காரமாக விரும்பினால், பச்சை மிளகாயை அதிகமாகச் சேர்த்துக்கொள்ளலாம்.இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு உணவாகும்.

பிரட் சில்லி (Bread Chilli) என்பது மீதமுள்ள பிரட்களை வைத்து 10 நிமிடங்களில் செய்யக்கூடிய ஒரு மொறுமொறுப்பான மற்றும் காரமான மாலை நேர சிற்றுண்டி.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News