'ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஹால் ஆப் பேம்' பட்டியலில் பிரட் லீ..
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் 'வேகப்புயல்' பிரட் லீ, 49. இரு முறை மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் பந்துவீசினார். 2003, உலக கோப்பை (50 ஓவர்) தொடரில் 22 விக்கெட் வீழ்த்தி, ஆஸ்தி ரேலியா சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்தார். 13 ஆண்டு (1999– 2012) ஆதிக்கம் செலுத்திய இவர், ஓய்வுக்கு பின் வர்ணனையாளராக உள்ளார். இவரது சேவையை அங்கீகரிக்கும் விதமாக, வாழ்நாள் சாதனையாளருக்கான 'ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஹால் ஆப் பேம்' பட்டியலில் நேற்று சேர்க்கப்பட்டார்.
0
Leave a Reply