மரவள்ளி கிழங்கு தோசை
தேவையான பொருட்கள்
1கப் இட்லி அரிசி,1கப் துருவிய மரவள்ளிக்கிழங்கு,1/2ஸ்பூன் மிளகு,
1/2 ஸ்பூன் சீரகம்,8 காய்ந்தமிளகாய், தேவைக்கு உப்பு,தேவைக்கு எண்ணெய்,
1/2ஸ்பூன் கடுகு.,ஒரு கொத்து குறிவேப்பிலை.,தேவைக்கு தண்ணீர்.
செய்முறை
ஒரு கப் இட்லி அரிசியை2 மணி நேரம் ஊறவைக்கவும்.பின்பு துருவிய மரவள்ளிக்கிழங்கு அதனுடன் சேர்த்து மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும்.
மரவள்ளிக்கிழங்கை அரைத்தவுடன் அதனுடன் ஊற வைத்த அரிசியை அரைக்கவும்.பின்பு சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும். மூன்று மணி நேரம் புளிக்க விடவேண்டும். தோசைக்கல்லை சூடு செய்து தோசை வார்க்கவும்.
இப்பொழுது சூடான மரவள்ளிக்கிழங்கு தோசை ரெடி.சுவைக்கு தேங்காய் சட்னி சேர்த்துக் கொள்ள வேண்டும்.ஈஸியான சத்தான கிழங்கு தோசை ரெடி.
0
Leave a Reply