டிஜிட்டல் யாத்ரா தளத்தில் இயங்கும் விமான நிலையமாக மாறிய சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம் இந்தியாவின் 14வது விமான நிலையமாக டிஜிட்டல் யாத்ரா தளத்தில் இயங்கும் விமான நிலையமாக மாறி உள்ளது. இந்த டிஜிட்டல் யாத்ரா தளத்தை மத்திய சிவில் ஏவியேஷன் துறை சார்பில் கொண்டுவரப்பட்டுள்ளதொழில்நுட்பமாகும். பயணிக்கும் பயணிகளுக்கு சிரமம் இல்லாத பயணத்தை கொண்டு வருவதற்காக டிஜிட்டல் யாத்ரா என்ற புதிய தளத்தை உருவாக்கியது. கடந்த2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த தளம் இந்தியாவில் உள்ள புது டெல்லி, பெங்களூரு, வாரணாசி, ஆகிய விமான நிலையங்களில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
பின்னர் இது மெல்ல மெல்ல விரிவடைந்து அடுத்த 10 விமான நிலையங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது 14 வது விமான நிலையமாக சென்னை விமான நிலையத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னை விமானநிலையம்வழியாகபயணிக்கும்பயணிகளுக்குஏராளமானவசதிகள்வந்துகுவியப்போகின்றன.டிஜிட்டல் யாத்ரா தொழில்நுட்பம் என்பது பயணிகளின் முகத்தை அடையாளம் கண்டு அவர்களுக்கு விமான பயணத்தில் எந்தவித சிரமமும் இல்லாமல் சுலபமாக விமானத்தில் ஏறுவதற்கான வழியை வகுத்துக் கொடுக்கிறது. இதனால் தேவையில்லாமல் விமான பயணத்தின் போது ஆங்காங்கே பயணிகள் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்படுவது தவிர்க்கப்படும்.இந்த டிஜிட்டல் யாத்ரா ஆப் மூலம்விமான பயணம் செய்ய முதலில் இந்த ஆப்பை பதிவிறக்கி அதில் பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்த பின்பு விமான நிலையத்திற்குள் நுழைந்த பின்பு இந்த ஆப்பை அங்குள்ள டிஜிட்டல் யாத்ரா மையத்திற்கு சென்று உங்களது அடையாள அட்டையை காண்பித்து முதன்முறையாக சோதனை செய்ய வேண்டும். இது முதன்முறை மட்டுமே செய்ய வேண்டியது அதன் பின்னர் இதை செய்ய வேண்டிய தேவை இல்லை. இப்படியாக பதிவு செய்யும் போது உங்கள் முகம் நேரடியாக கேமரா மூலம் பதிவு செய்யப்படும். அதன் பின்பு நீங்கள் விமானத்தின் உள்ளே ஏறுவதற்காக பாதுகாப்பு சோதனைக்கு நிற்கும் போதும் சரி,அல்லது விமானத்திற்கு உள்ளே போர்டிங் செய்யும் போதும் சரி, ஒவ்வொரு முறையும் நீங்கள் உங்களது போர்டிங் பாஸ் மற்றும் டிக்கெட்டை காட்ட வேண்டிய அவசியம் கிடையாது. அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி கேமரா மூலம் உங்களது முகம் ஸ்கேன் செய்யப்பட்டு உங்களது டிஜிட்டல் யாத்ரா ஐடி மூலம் நீங்கள் குறிப்பிட்ட நபர் தான் என்பதை கண்டறியப்பட்டு உங்களுக்கான டிக்கெட் என அனைத்தும் அதிலேயே காட்டப்பட்டு விடும். இதற்காக ஒவ்வொரு முறை நீங்கள் விமான நிலையத்திற்கு செல்லும் போது அந்த குறிப்பிட்ட டிக்கெட்டை புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்வதுநல்லது.
இதன் மூலம் உங்கள் டிக்கெட் மற்றும் போடிங் பாஸ் அனைத்தும் ஒரே டோக்கனுக்குள் கொண்டுவரப்பட்டு உங்களுக்கு சிரமம் இல்லாத போர்டிங் என்பது நடைபெறும் இதனால் தற்போது பல நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு முறையும் பாதுகாப்பு அதிகாரிகளிடம் தங்களது ஐடி ப்ரூஃப் மற்றும் விமான டிக்கெட் புக்கிங் பாஸ் ஆகியவற்றை காண்பிக்க வேண்டிய தேவை இருக்கிறது. இனி அது போன்ற தேவை இருக்காது.
0
Leave a Reply