25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


சென்னை ஐஐடி  9 கிலோவில் ஒரு சக்கர நாற்காலி உருவாக்கி சாதனை படைத்துள்ளது .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சென்னை ஐஐடி 9 கிலோவில் ஒரு சக்கர நாற்காலி உருவாக்கி சாதனை படைத்துள்ளது .

தற்போது சந்தையில் உள்ள சக்கர நாற்காலிகள்17 கிலோ அல்லது அதற்கு அதிகமாக இருக்கும் நிலையில், சென்னை ஐ.ஐ.டி. வெறும்9 கிலோ எடையில் ஒரு சக்கர நாற்காலியை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. ஆட்டோவில் கூட எளிதில் கொண்டு செல்லலாம்.. இது சக்கர நாற்காலியை பயன்படுத்துபவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.

'ஒய்.டி. ஒன்'(YDOne) என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய சக்கர நாற்காலியின் எடை வெறும் ஒன்பது கிலோதான். எனவே, இதை எளிதாக தூக்கி கொண்டும், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களிலும், பேருந்து, ரயில் போன்ற பொது போக்குவரத்து சாதனங்களிலும் கொண்டு செல்வது மிகவும் எளிது. இதில் இணைக்கப்பட்டுள்ள சிறிய சட்டகம், நாற்காலியை எளிதில் தூக்கிக் கொள்ள வசதியாக இருக்கும்.

 இந்த சக்கர நாற்காலியின் விலை₹75,000 முதல்₹80,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மாற்றுத்திறனாளிகள் மற்றும் சக்கர நாற்காலியை பயன்படுத்தும் வயதானவர்களுக்கு இது மிகவும் வசதியாக இருக்கும் என்று கூறப்படுவதால், மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பு பெறும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News