சின்க்யூபீல்டு கோப்பை: வெற்றி பெற்றார் பிரக்ஞானந்தா.
அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடைபெற்று வரும் சின்க்யூபீல்டு கோப்பை செஸ் தொடரின் எட்டாவது சுற்றில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.
‘கிராண்ட் செஸ் டூர்’ தொடரின் 11-வது சீசன் 5 தொடர்களாக நடைபெற்று வருகிறது. அதன் 5-வது மற்றும் கடைசி தொடரான சின்க்யூபீல்டு கோப்பையில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் லெவான் ஆரோனியன் உள்ளிட்ட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
நேற்று நடைபெற்ற எட்டாவது சுற்றில் பிரக்ஞானந்தா, பிரான்ஸ் வீரர் மேக்சிம் வாசியரை எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 20-வது நகர்த்தலுக்குப் பிறகு ஆட்டத்தில் முன்னிலை பெற்றார். தொடர்ந்து தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வெற்றியைப் பதிவு செய்தார்.
எட்டு சுற்றுகள் முடிவில் அமெரிக்காவின் வெஸ்லே 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். பிரக்ஞானந்தாவும் 5 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
0
Leave a Reply