கத்தியால் குத்தப்பட்ட நிலையிலும் 180 பேரை காப்பாற்றிய இந்திய விமானி.
துபாயில் இருந்து டெல் அவிவ் சென்ற பிளைதுபாய் விமானத்தில், 34,000 அடி உயரத்தில் விமானி ஸ்மிட் மச்சாரை துணை விமானி கத்தியால் தாக்கினார்.
காயமடைந்த நிலையிலும் சமயோசிதமாக செயல்பட்ட ஸ்மிட் மச்சார், விமானத்தை பாதுகாப்பாக இயக்கி பயணிகளின் உயிரை காப்பாற்ற உதவினார். பின்னர் மற்றொரு விமானி மூலம் சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் விமானத்தில் இருந்த 170-க்கும் மேற்பட்டோர் உயிர் தப்பினர்.
இந்நிலையில், காயமடைந்த விமானி ஸ்மிட் மச்சாருடன் பிரதமர் மோடி வீடியோ அழைப்பில் பேசி நலம் விசாரித்தார். அப்போது, தாக்குதலின்போது தைரியமாக இருக்க அனுமன் மந்திரம் சொன்னதாக ஸ்மிட் மச்சார் தெரிவித்தார்.
நடுவானில் 180 உயிர்களை காத்த இந்திய Hero, உலக தலைவர்கள் பாராட்டினர்.
0
Leave a Reply