கொத்தமல்லி சாதம் (Coriander Rice)
தேவையான பொருட்கள் :
சாதம் - 2 கப் (உதிரியாக வடித்தது),
கொத்தமல்லி இலை - 1 கப் (நன்றாக கழுவியது),
பச்சை மிளகாய் - 3 அல்லது 4,
இஞ்சி - சிறிய துண்டு,
பூண்டு - 3 பல் (விரும்பினால்),
கடலைப்பருப்பு & உளுத்தம் பருப்பு - தலா 1 தேக்கரண்டி,
சீரகம் - 1 தேக்கரண்டி,
எண்ணெய் அல்லது நெய் - 2 மேசைக் கரண்டி,
கடுகு - 1 தேக்கரண்டி,
முந்திரிப் பருப்பு – சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
மிக்ஸி ஜாரில் கழுவிய கொத்தமல்லி இலைகள், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் சிறிதளவு
உப்பு சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுத்தம்
பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
அதனுடன் முந்திரிப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை
மிதமான தீயில் நன்றாக வதக்கவும்.
மசாலா நன்கு சுருண்டு வந்ததும், வடித்த சாதம் மற்றும் தேவையான உப்பு சேர்த்து மெதுவாக
கிளறி இறக்கவும்.
சுவையான மற்றும் எளிமையான கொத்தமல்லி சாதம் தயார்.
0
Leave a Reply