25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகள்  தரும் கிராம்பு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகள்  தரும் கிராம்பு

மசாலா பொருட்களில் கிராம்புக்கு தனி இடம் உண்டு. இது உணவுகளில் தனித்துவமான சுவையை சேர்கிறது. உணவுக்கு வாசனை மற்றும் சுவையை கூட்டுவதை தாண்டி கிராம்பு பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்ததாகவும் அமைகிறது.

கிராம்பு மரத்தின் உலர்ந்த பூக்களில் இருந்து பெறப்படும் கிராம்புகள் ஊட்டச்சத்து மதிப்பு நிறைந்த ஒரு மசாலா பொருளாகும். சரிவிகித உணவின் ஒரு பகுதியாக மிதமான அளவு கிராம்பை சாப்பிட்டு வர நம் உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. எனினும் தினமும் கிராம்பை அதிக அளவில் சாப்பிடுவதால் ஒரு சில பக்க விளைவுகள் ஏற்படலாம். 

கிராம்பு முக்கியமான வைட்டமின்கள் மற்றும் மினரல்களின் அற்புதமான மூலமாக அமைகிறது. கிராம்பில் காணப்படும் ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ், ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரஸிற்கு எதிராக நமது உடலை பாதுகாக்கிறது. அதுமட்டுமல்லாமல் கிராம்புகளில் அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிரிகள் எதிர்ப்பு பண்புகளும் காணப்படுகிறது. 

வாய்வழி ஆரோக்கிய பலன்களுக்கு கிராம்பு பெயர் போனது. கிராம்பில் நுண்ணுயிரிகள் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் அது வாயில் இருக்கும் பாக்டீரியாக்களுடன் சண்டையிட்டு பற்சொத்தை மற்றும் ஈறு தொடர்பான நோய்கள் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது. ஒரு சில வாய்வழி சிகிச்சைகள் மற்றும் ப்ராடக்டுகளில் கிராம்பு எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. 

கிராம்புகள் பாரம்பரியமாக செரிமானத்தை ஊக்குவிப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது செரிமான நொதிகளின் உற்பத்தியை தூண்டி, இரைப்பை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கிராம்புகள் சாப்பிடுவதால் வாயு மற்றும் வயிற்று உப்புசம் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். 

கிராம்புகள் ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஒரு சில ஆய்வுகள் பரிந்துரை செய்கின்றன. இது ரத்த குளுக்கோஸ் அளவுகளை சீராக்கி இன்சுலின் உணர்திறனை ஊக்குவிக்கிறது.

கிராம்புகளில் எக்கச்சக்கமான ஆன்டிஆக்சிடன்ட்கள் இருப்பதால் அது ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை குறைத்து ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக போராடுகிறது. அதுமட்டுமல்லாமல் கிராம்பில் வலி நிவாரண பண்புகளும் உள்ளது. 

மிதமான அளவுகளில் கிராம்பு சாப்பிடுவது பெரும்பாலான நபர்களுக்கு பாதுகாப்பாக கருதப்பட்டாலும் இதனை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் பக்க விளைவுகள் உண்டாகும். கிராம்பு எண்ணெயை அதிகப்படியாக பருகும் பொழுது அதனால் குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமான கோளாறுகள் ஏற்படலாம். எனவே கிராம்பு எண்ணெயை அதிக அளவில் சாப்பிட கூடாது. 

கிராம்பு பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் நபருக்கு நபர் மாறுபடும். மேலும் ஒரு சில நபர்களில் கிராம்புகள் அலர்ஜி வினைகளை கூட உண்டாக்கலாம். கிராம்பு சாப்பிட்டதால் உங்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. ஏதேனும் மருத்துவ நிலையினால் பாதிக்கப்பட்டிருந்தால் கிராம்பு எடுத்துக் கொள்ளும் முன்பு உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக் கொள்ளலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News