25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


கொழுப்பை குறைக்கும் கொத்தவரை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கொழுப்பை குறைக்கும் கொத்தவரை

கொத்தவரை செடி வகை தாவரம்.சீனிஅவரைஎன்றும்அழைப்பர்.செடிமூன்றுமுதல், நான்குஅடிஉயரம்வரைவளரும்.இது, நைட்ரஜன் சத்தை மண்ணில்அதிகரிக்கச் செய்து, வளம் பெருக்கும்.மிதமான சூரிய ஒளியும், ஈரப்பதமானகாலநிலையும் இருந்தால் பலவகைமண்ணிலும் வளரும். இந்தியாவின்வடமேற்கு பகுதி மற்றும் அண்டை நாடானபாகிஸ்தானில் அதிகம் பயிரிடப்படுகிறது.

கொத்தவரையில் வைட்டமின்கள், கால்ஷியம், பாஸ்பரஸ், பொட்டாஷியம், இரும்பு, தாது உப்புக்கள் அதிகம் உள்ளன. குறைந்த எரிசக்தியும், அதிக நார்ச்சத்தும் உடையது. புரோட்டீன், கார்போ ஹைட்ரேட் சத்துகளும் நிறைந்துள்ளன.நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கு இதமான உணவுகளில் ஒன்று. உடல் எடை, கொழுப்பை குறைக்கும், மலச்சிக்கலை போக்கும். இதில் உள்ள நார்ச்சத்து,ரத்தத்தில் கெட்ட கொழுப்பு அளவை குறைக்கும். உயர் ரத்த அழுத்தத்தை மட்டுப்படுத்தும். 

இதய சம்பந்தமான நோய்களை தடுக்க உதவும். போலிக் அமிலம் உள்ளதால், கர்ப்பிணிப் பெண்கள் உணவில் அதிகம் சேர்த்து கொள்ளலாம்.கொத்தவரையில்உள்ள சத்துகள், மூளை மற்றும் நரம்புகளை அமைதிப்படுத்தும். மன அழுத்தத்தை குறைக்கும். இதை அளவோடு உண்பதே உடலுக்கு உகந்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News