அமெரிக்க ஓபன்: சபலென்கா, பெகுலா அரையிறுதிக்கு முன்னேற்றம்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் உலகின் ‘நம்பர்-1’ வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, 6-ம் நிலை வீராங்கனையான செக்குடியரசின் லிண்டா நோஸ்கோவாவை எதிர்கொண்டார்.
முதல் செட் ‘டைபிரேக்கர்’ வரை நீடித்த நிலையில், சபலென்கா 7-6 என கைப்பற்றினார். 2-வது செட்டை நோஸ்கோவா 6-3 என வென்றார். வெற்றியாளரைத் தீர்மானித்த 3-வது செட்டும் ‘டைபிரேக்கர்’ வரை சென்றது. இதில் சபலென்கா 7-6 என வெற்றி பெற்றார்.
2 மணி நேரம் 22 நிமிடங்கள் நீடித்த போட்டியின் முடிவில், நடப்பு சாம்பியனான சபலென்கா 7-6, 3-6, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சகநாட்டவரான எம்மா நவரோவை 3-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இதன் மூலம் தொடர்ச்சியாக 3-வது முறையாக (2024-26) அமெரிக்க ஓபன் அரையிறுதிக்கு பெகுலா முன்னேறினார்.
0
Leave a Reply