தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான 30 வகையான கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவினைத் துவக்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் (16.02.2026) மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் விருதுநகர் மாவட்டத்திலுள்ள 1 மாநகராட்சி (சிவகாசி), 5 நகராட்சிகள் (ராஜபாளையம், விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, சாத்தூர்) மற்றும் 9 பேரூராட்சிகள் என மொத்தம் 15 நகர்ப்புற அலகுகளில் உள்ள 360 வார்டுகளுக்கு 627 விளையாட்டு உபகரணத் தொகுப்புகளை வழங்கினார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்கப்படுத்தவும், திறமையை வெளிக்கொணரவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், துணை முதலமைச்சர் அவர்களும் குழந்தைகளின் உடல்நலத்தை பேண வேண்டும் என்ற எண்ணத்துடனும், மாணவ செல்வங்கள் அவர்களுக்கு பிடித்த விளையாட்டிலே உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற எண்ணத்துடனும், விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன.இன்றைக்கு, நம்முடைய விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி வார்டுகளுக்கு தலா 3 தொகுப்புகள், நகராட்சி வார்டுகளுக்கு தலா 2 தொகுப்புகள், பேரூராட்சி வார்டுகளுக்கு தலா 1 தொகுப்பு என மொத்தம் 360 வார்டுகளுக்கு 627 விளையாட்டு உபகரணத் தொகுப்புகள் வழங்கப்படவுள்ளன.இந்த ஒவ்வொரு தொகுப்பிலும் கிரிக்கெட் பேட், வாலிபால், ஃபுட்பால், சிலம்பக் கம்புகள், கேரம் போர்டு, செஸ் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் என 30 வகையான பொருட்கள் இடம்பெற்றுள்ளன.மேலும், விளையாட்டுப் பொருட்களின் இருப்பு நிலை (Stock) மற்றும் விநியோகத்தை வெளிப்படையாகக் கண்காணிக்க "ஆடுகளம்" (TNSPORTS) என்ற மொபைல் செயலி பயன்படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு வார்டு பொறுப்பாளர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட பயனர் குறியீட்டைப் பயன்படுத்தி, உபகரணங்களின் பயன்பாடு மற்றும் தினசரி நிலையை "ஆடுகளம்" (TNSPORTS) செயலியில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.அதுபோல் நம்முடைய அருப்புக்கோட்டை நகராட்சியில் 102 நபர்களுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. நம்முடைய அரசு அமைந்த பிறகு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில், 22 இலட்சம் பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், தாய்மார்களின் வங்கிக் கணக்கில் ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இத்தகைய பணிகளை சிறப்பாக செய்துள்ள நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.மாரிமுத்து, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply