மாவட்ட அளவிலான பொது விநியோகத்திட்ட கண்காணிப்புக்குழு கூட்டம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (27.06.2024) மாவட்ட அளவிலான பொது விநியோகத்திட்ட கண்காணிப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு விதிகள் -2017-ன் படி, 2017-ஆம் ஆண்டு முதல் மாவட்டம், வட்டம், மற்றும் நியாய விலைக்கடை அளவிலான கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு பொது விநியோகத்திட்ட கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி கண்காணிப்புக் குழு இரண்டு ஆண்டுகளுக்கு செல்லத்தக்கது.இந்த கண்காணிப்புக் குழுவின் நோக்கமானது பொது விநியோகத்திட்டத்தின் பயன்கள் (PDS- Public Distribution System) உரியவர்களை சென்றடைவதை உறுதி செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டது.
மேலும், பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாடுகளில் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் புகார்கள் தொடர்பாக பொதுமக்கள் ஃ குடும்ப அட்டைதாரர்களிடம் (complaint cell) Toll Free Number 1967 மற்றும் 1800 425 5901- என்ற கட்டணமில்லா தொடர்பு எண்களை பயன்படுத்துவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல், குடும்ப அட்டைதாரர்களிடம் முன்னுரிமை குடும்ப அட்டைகள் (PHH Card) மற்றும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள் (NPHH Card) பெற உள்ள தகுதிகள் மற்றும் தகுதியுடைய நபர்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.மேலும், பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாடுகளில் குறைபாடுகள் ஏதும் காணப்பட்டாலோ, புகார்கள் வரப்பெற்றாலோ, அதன் தொடர்பாக சம்மந்தப்பட்ட அலுவலர்களின் கவனத்திற்கும் மற்றும் மாவட்ட குறைதீர்வு அலுவலர்ஃ மாவட்ட வருவாய் அலுவலர் (District Grievance Redressal Officer - DGRO) கவனத்திற்கும் கொண்டு சென்று நடவடிக்கை எடுத்தல், வட்ட மற்றும் நியாய விலைக் கடைகள் வாரியாக அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுக்களை கண்காணித்தல் ஆகியவை குறித்த பணிகளை மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு மற்றும் உறுப்பினர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, இந்த மாதத்திற்கான பொது விநியோகத்திட்ட கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது.
0
Leave a Reply