25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


உணவக உரிமையாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு காலநிலை மாற்றத்தில் உணவுப் பொட்டலக்கழிவுகளின் தாக்கம் மற்றும் அதற்கான தீர்வுகள் என்ற தலைப்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிறப்பு பயிற்சி வகுப்பு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உணவக உரிமையாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு காலநிலை மாற்றத்தில் உணவுப் பொட்டலக்கழிவுகளின் தாக்கம் மற்றும் அதற்கான தீர்வுகள் என்ற தலைப்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிறப்பு பயிற்சி வகுப்பு

விருதுநகர் ஸ்ரீவித்யா கல்லூரியில் (26.02.2025) தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து மாவட்டத்திலுள்ள உணவக உரிமையாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு காலநிலை மாற்றத்தில் உணவுப் பொட்டலக்கழிவுகளின் தாக்கம் மற்றும் அதற்கான தீர்வுகள்(Impact of Food Packaging Waste to Environment with Remedies on Climate Resilience Approach) என்ற தலைப்பில் நடத்திய மாவட்ட அளவிலான சிறப்பு பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தொடங்கி வைத்தார்.

நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருள்கள் அப்படியே தூக்கி எறியக்கூடிய பொருள்களாக நவீன வாழ்க்கை முறை மாறிவிட்டது.  நாம் வாங்கும் ஒரு வேளைக்கான உணவு பொருட்கள் பொட்டலங்களில் ஒரு முறை உபயோகப்படுத்தக் கூடிய பொருட்கள் அதிகமான உள்ளன.
இன்று மாறி வரக்கூடிய சூழ்நிலையில் நகரங்களில் 10 வருடங்களுக்கு முன்னால் உணவுக்காக எத்தனை முறை வீட்டில் அடுப்பை பற்ற வைத்தார்கள் என்று ஒரு ஆய்வு எடுத்துப் பார்த்தால், ஒரு மாதத்திற்கு 90 முறை சாப்பிடுவதற்கு 50 முதல் 60 முறை அடுப்பை பற்ற வைக்கிறார்கள்.தற்போது அந்த 50 முதல் 60 என்ற முறை என்பது 20 முதல் 30 வரை என வந்துவிட்டது. அதாவது பெரும்பாலும் ஒருவேளை தான் வீட்டில் சமையல் செய்கிறார்கள். அவர்களுக்கு வெளியில் இருந்து உணவுப் பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. இந்த பார்சல் வாங்கக்கூடிய கலாச்சாரம் அதிகமாய் கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு நகரங்களிலுமே உணவுகளை வீட்டிற்கே சென்று வழங்கும் சேவைகள் வளர்ந்து விட்டன.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் உணவகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் திடக்கழிவு மேலாண்மை எப்படி கையாள வேண்டும் என்ற சட்ட விதிகள் இருக்கின்றன. மேலும், குப்பைகள் ஒரு வீட்டில் உருவாகும் போது அதை மேலாண்மை செய்வதற்கு அந்த வீட்டு உரிமையாளருக்கான பொறுப்புகளும் இருக்கின்றன. ஒரே ஒரு பிளாஸ்டிகை எரிப்பதன் மூலமாக, நாம் சாப்பிட்டுவிட்டு தூக்கி எறியக்கூடிய நெகிழியை எரித்தோம் என்றால் அதில் வரக்கூடிய புகையில் எல்லா விதமான மோசமான வாயுக்களும் இருக்கின்றன. புற்றுநோயை உண்டாக்கக்கூடிய பொருட்கள் அதில் இருக்கிறது. இது அறிவியல் பூர்வமான உண்மை.தற்காலிக நமது சௌரியத்திற்காக நாம் வாழக்கூடிய பூமியை ஒவ்வொரு நாளும் மிக மோசமாக மாற்றிக் கொண்டிருக்கக் கூடிய சூழ்நிலை உருவாகிறது. நீர்நிலைகள் பிளாஸ்டிக் கழிவுகளால் மாசடைகிறது. நமக்கு இருக்கக்கூடிய முக்கிய பொறுப்புகலில் முக்கியமானது பிளாஸ்டிக் பொருட்களை குறைப்பது. குறிப்பாக ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிழியின் பயன்பாட்டை குறைக்க முடியுமா என்றால் கண்டிப்பாக முடியும்.

உணவு நிறுவனங்கள் பிளாஸ்டிக் பைகளை குறைப்பதற்கும், வாடிக்கையாளர்கள் துணிப்பைகள் உபயோகிப்பதை ஊக்குவிக்கும் வகையிலும் தள்ளுபடி போன்ற புதிய புத்திகளை கையாளலாம். இந்த கூட்டத்தின் நோக்கம் சட்ட வழிமுறைகள், சட்ட பிரச்சனைகளை சொல்வது மட்டும் இல்லை. இந்த கூட்டத்தினுடைய நோக்கம் ஒரு பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். உங்களுடைய கடைகளில் சுற்றுச்சூழல்களுக்கு தீங்கு விளைவிக்கும் நெகிலி பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என்ற முன்னெடுப்பு எடுக்க வேண்டும். இது ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும், பிறகு அதுவே பொது மக்களுக்கு பழகிவிடும்.

எனவே, இது ஒரு தொடர்ச்சியான செயல்பாடு. கடைகள், வணிக வளாகங்கள், பெரிய நிறுவனங்கள் அவர்களுடைய திடக்கழிவு மேலாண்மையை முறையாக கையாள வேண்டும். குப்பைகளை மறுசுழற்சி செய்ய வேண்டும். குப்பைகள் கொட்டுவது, திறந்த வெளி மலம் கழித்தல், குப்பைகள் எரிப்பது குறித்த மக்களின் மனநிலையை மாற்றுவதற்கு தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உணவகங்களில் பிளாஸ்டிக் பைகளை குறைப்பதோடு, வாடிக்கையாளர்கள் துணிப்பைகள் உபயோகிப்பதை ஊக்குவிக்க வேண்டும். அப்போதுதான் மாற்றத்தை உருவாக்க முடியும். எனவே, இதன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) திருமதி நாச்சியார் அம்மாள் உட்பட உணவக உரிமையாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News